Thursday, February 13, 2020

பிரசாந்த் கிஷோர் பணி: திமுக விளக்கம்.

''தி.மு.க.,வுக்கு, பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக தான் இருப்பார்; இயக்க மாட்டார்,'' என, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., கூறினார்.
PrashantKishor,DMK,ipac,திமுக,பிரசாந்த்கிஷோர்,ஐபேக்
சென்னை, அறிவாலயத்தில், அவரது பேட்டி: தி.மு.க., ஆட்சியில், 14.34 சதவீதமாக இருந்த நிதி நிலைமை, தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில், 10.49 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, 69 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், வருமானத்தில், 2.50 சதவீதம் முதலீடு செய்யப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், 2 சதவீதம் மட்டும் முதலீடு செய்யப்படுகிறது.




2011ல், தி.மு.க., ஆட்சி முடியும் போது, தமிழக அரசின் மொத்தக் கடன், 1.02 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு குடிமகனுக்கான கடன், 14 ஆயிரம் ரூபாய். தற்போது, 3.59 லட்சம் கோடி ரூபாயாக மொத்த கடன் இருப்பபதால், தலைக்கு, 45 ஆயிரம் ரூபாயாக கடன் சுமை அதிகரித்துள்ளது. பத்து ஆண்டுகளாக, நிதி ஆலோசகராக இருந்த தலைமை செயலர் சண்முகம், தமிழக நிதி மேலாண்மையில் என்ன செய்தார்; இவர் ஏன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன், தி.மு.க., ஒப்பந்தம் செய்ததை எதிர்க்கிறார்; தி.மு.க.,விற்கு, பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக தான் இருப்பார்; இயக்க மாட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...