Tuesday, February 18, 2020

முதல்வரான பின் முதலியார் அல்லாதோரை வளர்த்துவிட்டு திமுகவில் முதலியார் ஆதிக்கத்தை முறித்தும் போட்டார்.

திமுக என்பது முதலியார் சங்கம் என்பது அக்காலத்திலிருந்தே வந்த நம்பிக்கை, அதன் தொடக்க காட்சிகள் அப்படித்தான் இருந்தது
அண்ணாதுரை உட்பட முன்னணி தலைவர்கள் முதலியார்களாகவே இருந்தனர், அது திராவிடர் கழகமா முதலியார் கழகமா என்றெல்லாம் கேள்விகள் இருந்தன‌
இந்த கூட்டத்தில் 10த்தோடு ஒன்றாக இருந்தார் கருணாநிதி, இந்த முதலியார் படையினை தனக்கு எங்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு தொடக்கத்திலே இருந்தது
கருணாநிதியின் பெரும் சாதுர்யம் இது, எது பலமோ அல்லது பலவீனமோ அதை தனக்கு சாதகமாக மாறும் காலம் வரை பொறுத்திருப்பார், பின் சட்டென பாய்வார்
காலம் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தபொழுது வந்தது, முதலில் மந்திரி சபையில் கருணாநிதிக்கு இடமில்லை, அந்த முதலியார் படையே அமைச்சராயிருந்தது
மிக சரியாக அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தன் சித்துவிளையாட்டுக்களை தொடங்கினார் கருணாநிதி
தாழ்த்தபட்டவனுக்கு மந்திரி பதவி இல்லை என்றும் அண்ணா முதலியார் பக்கம் சாதிவெறி காட்டிவிட்டார் என்றும் கட்சி உடைபட போவதாகவும் பெரும் வதந்திகள் வந்தன‌
அதை கிளப்பிவிட்டவர் யாரென சொல்ல தேவையில்லை
விஷயத்தை கேள்விபட்டு குழம்பி பதறிய அண்ணா முன்னால் அமைதிபடை சத்தியராஜ் போல் நின்ற கருணாநிதி, இதெல்லாம் எவனோ பதவிக்கு ஆசைபட்டவன் கிளப்பிய வதந்தி என்றும் காலமெல்லாம் பதவியின்றி உழைக்க கருணாநிதி போன்ற தம்பிகள் ஆயிரம் உண்டெனவும் ஆறுதல் சொல்லிகொண்டிருந்தார்
அப்படியே தாழ்த்தபட்டவனுக்கு பதவி கொடுத்தால் காமரஜர் கக்கனுக்கு கொடுத்தது போல் கொடுத்தால் இச்சிக்கல் தீருமென்றார், தன்னைவிட தாழ்த்தபட்டவன் கட்சியில் இல்லை என்பது அவருக்கு தெரியாதா? அண்ணாவுக்குத்தான் புரியாதா?
விளைவு கருணாநிதி பொதுபணிதுறை அமைச்சரானார், அப்படியே முதலியார்களை சரித்துவிட்டு முதல்வருமானார்
முதல்வரான பின் முதலியார் அல்லாதோரை வளர்த்துவிட்டு திமுகவில் முதலியார் ஆதிக்கத்தை முறித்தும் போட்டார்
அண்ணாவுக்கு பின் ஒரு முதலியார் திமுக கழகத்தை கைபற்றவேண்டும் என்ற கணவில் மண் அள்ளிபோட்டார் கருணாநிதி
அந்த கோபம் ஆர்.எஸ் பாரதிக்கு வந்திருக்கலாம், இனி திமுக ஆட்சிக்கே வரகூடாது என மனதால் கருவியிருக்கலாம், முதலியார் கணவில் மண் அள்ளிபோட்ட கருணாநிதியின் மகனுக்கு வாய்ப்பு வந்துவிட கூடாது என திட்டமிட்டு பழிவாங்கியிருக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...