உள்ளூரிலோ , வெளியூரிலோ வாகனங்களை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு செல்லும்போது நிறுத்து கின்ற இடம் மற்றவர்களுக்கு இடையூறாக இல்லாத இடம்தானா என்பதை தெரிந்து ,அறிந்து ,உணர்ந்து , வாகனத்தை நிறுத்திச் செல்ல வேண்டும்
வியாபார நிறுவனங்களின் முன்பு வாகனத்தை நிறுத்துவது தவிர்க்கணும்
எப்போது வேண்டுமானாலும் வியாபார நிறுவனம் திறக்க வாய்ப்புண்டு. அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று விட்டால் ,அந்த வியாபார நிறுவனர், அவர்தம் கடை பணியாளர், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்படும்.
வீடுகளின் முன்னால் நிறுத்தினால் , வீட்டிற்குள் இருக்கின்ற இரு சக்கர வாகனங்கள் வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்படும்.
வாகன ஓட்டுனரை தொடர்பு கொண்டு வாகனத்தை அப்புறப்படுத்தச் சொல்லலா மெனில் வாகனத்தில் தொடர்பு எண் இருக்காது.
பிறகு எப்படி அவ்விடத்து இடையூறை தவிர்ப்பது ?
மிக எளிதாக ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டால் , அனைவருக்கும் நல்லது.
ஒவ்வொரு வாகனத்திலும் , உரிமையாளர் அல்லது ஓட்டுனர் தொடர்பு எண்ணை ஒரு அட்டையில் எழுதி , வாகனத்தை நிறுத்தும்போது , வெளியே இருந்து பார்ப்பவர் களுக்குத் தெரியும்படி வாகனத் தின் உள்ளே வைத்தால் அந்த எனில் தொடர்பு கொண்டு வாகனத்தை அப்புறப்படுத்தச் சொல்லி மற்றவர்களின் சிரமம் போக்க உதவும்.
அதே நேரத்தில், பார்க்கிங் சென்ஸ் என்று சொல்வார்கள். அது மிக மிக முக்கியம் .
வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் போது, சந்திற்கு உள்ளே , சந்து திருப்பம், சந்திற்கு எதிரில், வீடுகளில் ,இரு சக்கர வாகனங்கள் இறக்குவதற்கு அமைக்கப் பட்டுள்ள சறுக்கலான பகுதி , மின் ட்ரேன்ஸ் பார்மர்களுக்கு கீழே ஆகிய பகுதிகளில் வாகனம் நிறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவரின் செயலும் மற்றவருக்கு நான்மை செய்வதாகவே அமையட்டும் .
மகிழ்வித்து மகிழ்வோம்.
No comments:
Post a Comment