தமிழ் ஊடகங்கங்கள் புதியதலைமுறை TV தந்தி TV நீயூஸ்7 TV நீயூஸ் 18 TV
சன் TV பாலிமர்TV JAYATV TV நீயூஸ் j TV இவைகள் சொல்லாத நாட்டுக்கு நல்ல செய்தியை நான் சொல்லுறேன்
கடந்த 10 நாட்களாக, சில மிக நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. அதனால் இந்த பதிவு
சரி. முதல் நல்ல விஷயம். உலக வங்கி, நமது மோடியின் “க்ளீன் இந்தியா” என்னும் சுத்தமான இந்தியா
திட்டத்தை வெகுவாகப் பாராட்டி, அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார் 100 கோடி ரூபாய்) தன் பங்காகக் கொடுத்துள்ளது. நமது ஊடகங்களுக்கு அசுத்தமான மனது என்பதால் , இந்த சுத்தமான விஷயத்தை மக்களுக்குத் திரும்பத் திருப்ப எடுத்துச் சொல்ல வில்லை. அதுவும்,மோடியைப் பாராட்டி விட்டார்களே; பொறுக்குமா
இரண்டாவதாக, உலகெங்கும் சூரிய சக்தியை ஊக்குவிக்கும், “ஐ இ ஏ “ ( இன்வென்ஷன்ஸ் ஃபார் எனெர்ஜி ஆல்டெர்னேடிவ்ஸ்) என்னும் மாற்றுச் சக்திக் கண்டுபிடிப்பு அமைப்பு, ,இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள, அணு சக்தி ஒப்பந்தத்தை மிகவும் பாராட்டி,
இதனால், இந்தியா சூரிய சக்தியைப் பெறுவதில் ஒரு பெரிய “மைல் கல்லைத் தொட்டிருக்கிறது” அன்று புகழ்ந்துள்ளது. இதுவும், மோடிக்கு நல்லப் பெயரைக் கொடுக்கும் என்பதால், தமிழ் மக்களுக்குத் தெரிந்து விடக் கூடாதென்று, ஊழல் ஊடகங்கள் நினைப்பதில் தவறில்லை.
மூன்றாவதாக, அடுத்த ஓராண்டில், ‘கூகுள்” நிறுவனம், இந்தியாவில் உள்ள 100 ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச “வை-ஃபை” சேவையை அளிக்கப் போகிறது.
மேலும், அது, 20 லட்சம் இந்தியாவின் ஆண்ட்ராய்ட் டெவெலப்பர்ஸ்” என்னும் மென்பொருள் விருத்தியாளர்களுக்குப் பயிற்சிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனால், வருங்காலத்தில், 20 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. இதற்காவது மோடியப் பாராட்டலாமே. நாமும் என்ன
ப. சிதம்பரமா? தான் “எடக்கு-மடக்கு” பண்ணி விட்டு, மோடியைத் திட்டுவதற்கு?
நான்காவதாக, “சி பி எஸ் சி “எனப்படும், மத்திய அரசின் பாடத் திட்டப் பள்ளிகளின் புத்தகங்கள், இனி கணினியில் நேரடியாகக் (ஆன்லைன்) கிடைக்குமென மத்திய அரசின் அறிவிப்பு வந்திருக்கிறது.
இது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம். ஊடகங்கள் பாராட்டலாமே
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை விட்டு விலகி, தங்களுக்கு உள்ள சமூகப் பொறுப்புகளை விடுத்து, ஒரு சார்பாக இருந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி செய்திகளைத் திரித்து சொல்லி, எளிய வாக்காளர்களைத் திசை திருப்பி விட முயலும்போது, நாம் தான் நல்ல செய்திகளை மக்களிடம் பரப்ப வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் இதனைக் சமூகக் கடமையாக எடுத்துக் கொண்டால் தான், மிகச் சிறந்த
மோடி அரசின் உழைப்பின் பயன் மக்களுக்குத் தெரியும்.
இல்லாவிட்டால், மறுபடியும் ராஹுல் காந்தியும், ப சிதம்பரமும் நம்மிடம் வந்து பயமுறுத்தும் நிலை தான் ஏற்படும். இதனல் நஷ்டமடையப் போவது
மோடி அல்ல. நாம் தான் என்பதை உணர்வீர்.........
No comments:
Post a Comment