உங்கள் WiFi திருடப்படுகிறதா? என்று கேட்டால் பதில் சொல்வது கஷ்டம். ஆனால் வாய்ப்புகள் நிறையவே உண்டு!!!
நாம் பெரும்பாலும் WiFi Dongle அல்லது Broadband WiFi பயன்படுத்துவது உண்டு. அவற்றிற்கு சில வழிகளில் உங்கள் Password ஐ விபரம் தெரிந்த ஒருவரால் திருட முடியும்!
சமீபத்தில் எனது WiFi ஒன்றின் பயன்பாடு மிக அதிகமாக இருந்தது. அது ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகமாக, பின் படிப்படியாக அதன் பயன்பாடு மிக அதிகமாகி அதுனுடைய Daily Quota விரைவில் முடிவது கண்டு சந்தேகம் கொண்டேன். அதன் பின்
Monitor செய்தபோது அதிக எண்ணிக்கையில் Connection, WiFi Device உடன் தொடர்பில் உள்ளதை அறிந்து, உடனே Default ஆக வரும் Password களை மாற்றியபின் அது முற்றிலும் தடுக்கப்பட்டது.
அது எப்படி என்ற விளக்கத்தை பாதுகாப்பு கருதி இங்கு தவிர்க்கிறேன்.
முக்கியமாக ஒரு WiFi Device வாங்கினால் அதன் Default Password களை உடனே மாற்றவும். இதில் தவறானவர்கள், தவறான வழியில் ஏதேனும் நம் WiFi மூலம் செய்தால், நாமும் நம் அறியாமையால் அந்த குற்றத்திற்கு பொறுப்பாகிறோம் என்பதை ஞாபகத்தில் கொள்ளவும். வேண்டியவர்களுக்கு பகிரவும்.
அக்கறையுடன்.
No comments:
Post a Comment