Wednesday, November 25, 2020

ஜெ.,மரண வழக்கு விசாரணை': அப்பல்லோ'வுக்கு'நோட்டீஸ்'

 ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, 'அப்பல்லோ' மருத்துவமனைக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க, மூன்று மாதம் அவகாசம் தரப்பட்டது. விசாரணை முடியாததால், இதுவரை எட்டு முறை, கமிஷனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஆறுமுகசாமி கமிஷனின் விசாணைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெ., மரண வழக்கு விசாரணை 'அப்பல்லோ'வுக்கு 'நோட்டீஸ்'


இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு, கடந்தஆணடு அக்டோபரில் தடை விதித்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை, முடியும்தருவாயில் உள்ளது. ஏற்கனவே, கமிஷனின் பதவி காலம் எட்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கமிஷனின் உறுப்பினர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பளமும் வழங்கி வருகிறோம். அதனால், ஆறுமுகசாமி கமிஷனுக்கு விதிக்கப்பட்டள்ள இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் அப்துல் நாசிர், சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் மனுவுக்கு, ஒரு வாரத்துக்குள் பதில் தாக்கல் செய்ய, அப்பல்லோ மருத்துமனைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, டிச., 7க்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...