பொங்கல் பொங்கிவரும் வேளையில் பானை உடைந்த கதைபோல, கூட்டணிக்கட்சிகளை இழுத்துப்பிர்டித்து தேர்தல்வரை காலம் கடத்தவே தடுமாறிக்கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு அடுத்த இடியாக அவரது அண்ணன் அழகிரிமூலம் விழுந்துள்ளது.
கருணாநிதி காலத்திலிருந்தே ஸ்டாலினுக்கு கடும் சவாலாக இருந்துவந்த அழகிரியை ஓரங்கட்டி கட்சியிலிருந்தே கட்டம்கட்டி மேலேறி வந்தவர்தான் ஸ்டாலின். ஸ்டாலின் தனக்கான இமேஜை, ரொம்பவே செலவழித்து விளம்பரம் செய்து உருவாக்கினார். ஆனால் அழகிரிக்கு இயல்பாகவே மதுரை மண்டலத்தில் தீவிர விசுவாசிகள் உண்டு. அதனால்தான் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மவுசு குறையாமல் ரவுசு பண்ணிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தீபாவளிப் பண்டியையொட்டி அவர் தனது ஆதரவாளர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அழகிரி, “தீபாவளி வாழ்த்து சொல்லத்தான் கூப்பிட்டேன்” எனக் குறிப்பிட்டுவிட்டு, தனிக்கட்சி தொடர்பாகவும் கருத்து கேட்டுள்ளார். இதை அவர்களால் நம்பவே முடவில்லை. கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டதாக மதுரையில் தகவல் பரவுகிறது. வரும் டிசம்பர் மாதம் கட்சி தொடர்பான அறிவிப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தீயாக திமுக வட்டாரம் வரை பரவியுள்ளது. விரைவில் ஆதரவாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிப்பேன் என்று அழகிரி கூறியிருப்பதாகத் தகவல்!
இதைக் கேள்விப்பட்டதிலிருந்தே ஸ்டாலினுக்கு கிலி ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே மூன்றாவது அணி குறித்து சில திமுக கூட்டணிக் கட்சிகள் சிந்தித்துவரும் சூழலில், அழகிரியோடு அவர்கள் சேர்ந்துவிடுவார்களோ, நம்முடைய கூட்டணி மேலும் மேலும் பலவீனமாகுமோ என்ற அச்சத்தில் உள்ளார். அழகிரியைச் சமாதானப்படுத்த இறுதிக்கட்ட முயற்சியிலும் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது!
No comments:
Post a Comment