ஏன்னு ஒவ்வொரு காரணமா சொல்றேன்... படிச்சிட்டு அப்புறமா கருத்து சொல்லுங்க...
1. சென்னை வட்டாரத்திலுள்ள 14 தொகுதிகள்ல ரொம்ப அதிகமா திமுகவைத் தான் ஜெயிக்க வைப்பாங்க!. புதிய வீராணம் மூலமா ஜெயலலிதா அம்மா சென்னைக்கு தண்ணி கொண்டு வரலைன்னா இப்போ என்ன நிலைமைன்னு யோசிக்கக் கூட மாட்டாங்க!
2. தமிழ்நாட்ல மற்ற மாவட்டங்கள்ல கரண்ட்டை கட் பண்ணாலும் சென்னை, மாநிலத் தலைநகரா இருக்குறதினால அங்க மட்டும் பவர்கட்னா என்னன்னே தெரியாம வச்சிருப்பாங்க... மற்ற உள்மாவட்டங்கள்ல 20 மணிநேரம்கூட மின்சாரத்தை நிறுத்திட்டு சென்னையை கவனிக்கிறதுனால ஒரு பாசமோ என்னவோ?
3. சென்னைல புயல் வெள்ளம் வந்து பாதிப்புன்னா முதல்ல வரிந்துகட்டிக் கொண்டு அனைத்து உதவிகளையும் அனுப்புறது மற்ற மாவட்டத்துக்காரங்க தான்!. ஆனா... மற்ற மாவட்டத்துக்காரங்களுக்கு எவ்ளோ பெரிய பிரச்னை வந்தாலும் சென்னைக்காரங்க... வேற்றுக் கிரகத்துல இருக்குற மாதிரியே நெனச்சிக்கிட்டு என்னன்னு கூட கண்டுக்க மாட்டாங்க!
4. எந்த வளர்ச்சித் திட்டங்கள்னாலும் சென்னையைத் தாண்டி மற்ற உள்மாவட்டங்களுக்கு எந்த திட்டங்களும் செஞ்சிறக் கூடாதுன்னு அரசே நினைக்கும்போது மத்தவங்களை சொல்லி என்ன பண்றது?
5. இப்படி எல்லாத் திட்டங்களையும் தொழிலையும் தொழிற்சாலைகளையும் சென்னையைச் சுற்றி மட்டும் வச்சிட்டு அங்கேயே கூட்டத்தை கூட்டிட்டு அப்புறமா கதற வேண்டியது...
6. ஏரி, குளங்கள் இருந்த இடம்னு தெரிஞ்சே ரொம்ப சீப்பாக் கிடைக்குதுன்னு அங்கேயே வீட்டைக்கட்டி குடிபோக வேண்டியது... அப்புறமா மழை, வெள்ளம் வந்து அங்கே தேங்கிச்சின்னா குய்யோ முறையோன்னு டிவிக்காரங்க முன்னாடி கத்தி மத்தவங்களையும் பயத்துலயே வைக்க வேண்டியது...
7. மழை, புயல், வெள்ளம்னு வரும்போது மட்டும் அரசுகளை திட்ட வேண்டியது, வடிஞ்சி முடிஞ்சவுடனே சர்வ சாதாரணமா அடுத்த வேலையை பார்க்க வேண்டியது... அடுத்த வருஷம் இதே மாதிரி வருமே அப்ப இதே மாதிரி ஆகாம இருக்க என்ன பண்ணலாம்னு முன்னெச்சரிக்கையா எதுவுமே செய்யாம ஒவ்வொரு வருஷமும் புலம்ப வேண்டியது...
இப்புடியே இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்...
இத்தோட நிறுத்திக்கிறேன்.
உண்மைதானேன்னு நெனைக்கிறவங்க கடந்து செல்லுங்க...
பொங்கனும்னு நினைக்கிறவங்க தாராளமா வந்து எதிர்ப்பு தெரிவிங்க!
வாங்க! வாங்க!...
No comments:
Post a Comment