நிருபர்: சார், நீங்க கமலுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லியிருக்கீங்களே, செய்வீங்களா?
ரஜினி: இதுக்கு முன்னாடி நாம என்ன சொன்னோம்?
நிருபர்: ஜக்கி வாசுதேவ் நதிகளை இணைப்பதற்கு பணம் கொடுக்கறதா சொன்னீங்க.
ரஜினி: அதுக்கு முன்னாடி என்ன சொன்னோம்?
நிருபர்: ஆந்தரால உங்க படம் ரிலீஸ் ஆகும்போது, புயலுக்கு நிவாரணப் பணம் தரதா சொன்னீங்க.
ரஜினி: அதுக்கு முன்னாடி என்ன சொன்னோம்?
நிருபர்: மத்திய அரசின் நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு ஒரு கோடி தருவதா சொன்னீங்க.
ரஜினி: அதுக்கு முன்னாடி என்ன சொன்னோம்?
நிருபர்: உங்க முதல் மகள் கல்யாணத்திற்கு எல்லா ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்க முடியாததால, ராகவேந்திரா கல்யாண மண்டபத்துல அனைவர்க்கும் தனியா கறி விருந்து கொடுக்கிறதா சொன்னீங்க.
ரஜினி: அதுக்கு முன்னாடி என்ன சொன்னோம்?
நிருபர்: கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த பள்ளி மாணவர்களுக்கு நிதி அளிப்பதா சொன்னீங்க.
ரஜினி: நாங்க வாடகைக்கு குடியிருக்கும் இடத்துல என்ன சொன்னோம்?
நிருபர்; மாதா மாதம் வாடகை தருவதாகவும்,உயர்த்தினால் ஏற்பதாவதாகவும், தேவைப் பட்டால் காலி செய்வதாகவும் சொன்னீங்க.
ரஜினி: எங்க பள்ளியில் ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் பொழுது என்ன சொன்னோம்?
நிருபர்: மாதாமாதம் ஒழுங்கா சம்பளம் தருவதாக சொன்னீங்க.
ரஜினி: வேற ஏதாவது கேள்வி இருக்கா:
நிருபர்: ( இரு கைகளையும் குவித்து) ஐய்யா! உங்களைப் பற்றி ரொம்ப நன்னா தெருஞ்சுபோச்சு. ஒரு சந்தேகமும் இல்லை.
ரஜினி : ஹா.. ஹா.. ஹா ( தனது டிரேட் மார்க் சிரிப்பு).
No comments:
Post a Comment