Monday, November 30, 2020

இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை, டிசிஎஸ் நிறுவனர் எஃப்சி கோலி காலமானார்.

 

😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரியின் தந்தையான, டிசிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் எஃப்சி கோலி காலமானார். அவருக்கு வயது 96.
டாடா குழுமத்தின் மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்(டிசிஎஸ்)ஐ நிறுவியவர் எஃப்சி கோலி. டிசிஎஸ் நிறுவனத்தை உலகளவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உயர்த்தியவர்.
டாடா சன்ஸ் லிமிடெட் நிறுவன போர்டு இயக்குநராக இருந்த கோலி, டாடா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா யுனிசெஸ் லிமிடெட், டாடா எலெக்ட்ரிக் கம்பெனி, டாடா ஹனிவெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் போர்டு இயக்குநராகவும் இருந்தவர். டாடா குழுமத்தின் பிரபலமான முகமாக இருந்தவர் எஃப்சி கோலி.
1924ம் ஆண்டு பிறந்து, ஐடி துறையில் சாதித்த எஃப்சி கோலி, இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை என்கிற அளவிற்கு திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்தவர். வயது முதிர்வால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96.
Image may contain: one or more people and closeup, text that says 'BREAKING: மிக முக்கிய பிரபலம் மரணம்... இந்தியர்கள் சோகம்!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...