Tuesday, November 17, 2020

ஓட்டப்பயிற்சி மற்றும் ஜாக்கிங்.

🏃‍♂இளைஞர்களுக்கு ‘ஜாக்கிங்’ எனப்படும் ஓட்டப்பயிற்சி ஏன் அவசியம் தெரியுமா?
🏃‍♀ஓட்டப்பயிற்சி மற்றும் ஜாக்கிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களுக்கு ‘ஜாக்கிங்’ எனப்படும் ஓட்டப்பயிற்சி ஏன் அவசியம் என்பதை விளக்கமாக பார்ப்போம்.
🏃‍♂* ஜாக்கிங் செய்யும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்து, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.
🏃‍♀* ஒரு மணி நேரம் ஜாக்கிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, பிட்டான தோற்றம் கிடைக்கிறது.
🏃‍♂* நுரையீரல், மூச்சுக் குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சினைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
🏃‍♀* ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்த ஓட்டம் சீராகப் பாய வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.
🏃‍♂* உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.
🏃‍♀* ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
🏃‍♂* கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசை நார்கள் வலிமை பெறுகின்றன.
🏃‍♀* ஓட்டப்பயிற்சி மற்றும் ஜாக்கிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
🏃‍♂* ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது
🏃‍♂🏃‍♀🏃‍♂🏃‍♀🏃‍♂🏃‍♀🏃‍♂🏃‍♀🏃‍♂🏃‍♀🏃‍♂🏃‍♀🏃‍♂🏃‍♀🏃‍♂🏃‍♀
Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...