இது "பெரியார் பிறந்த மண்", "பெரியார் மண்" என்று கூறும்போது, இந்த தமிழகத்தில் மட்டும் ஏனிந்த சாதிய மோதல்கள்?...
பெரியார் பிறக்காத கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இந்த சாதிய மோதல்கள் இல்லையே ஏன்?....
சிந்தித்தால் தெளிவு பிறக்கும்; காரணம் புரியும்.
அம்மாநிலங்களில் அனைத்து சாதியினரும் பயன்பெறும்வகையில் கம்பார்ட்மெண்ட் சிஸ்டத்தின்படி இடப்பங்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் சில சமுதாயங்களுக்கு தனி இடப்பங்கீடும் வழங்கப்பட்டு வருகின்றது; மிக சிறிய அளவில் உள்ள விஷ்வகர்மா சாதியினருக்குக்கூட இடப்பங்கீடு நடைமுறையில் உள்ளது; எனவே அவரவர்க்குரிய இடப்பங்கீட்டின் மூலம் அனைத்து சமுதாயங்களும் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் உயர்நிலையை அடைந்து வாழ்வில் முன்னேறும் வாய்ப்பை எளிதாக அடைகின்றனர். இதனால் அம்மாநிலங்களில் எந்தவித சாதிய மோதல் பிரச்சினைகளும் எழுவதில்லை.
இதே முறையை தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும்; மக்கள் தொகை கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் ஒரு சதவீத மக்கள் தொகை கொண்டுள்ள சாதிகளுக்கும் விகிதாச்சார அடிப்படையில் இடப்பங்கீடு கிடைக்கவேண்டியது அவசியம்; அதற்காகவும் 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்றவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பல ஆண்டுகளாக மருத்துவர் ஐயா போராடி வருகிறார்; ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியாளர்களிடம் வற்புறுத்தி வருகின்றார்; தேர்தல் கூட்டணி வைக்கும்போதுகூட, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, 69% இடப்பஙகீட்டை காப்பாற்றவும், விகிதாச்சரப்படி இடப்பங்கீடு முறையை அமல்படுத்தவும் கூட்டணி ஒப்பந்தம் மூலம் முதல் கோரிக்கையாக பாமக முன்வைத்துள்ளது. அதுமட்டுமின்றி 40 ஆண்டுகளாக எல்லா வளர்ச்சி நிலையிலும் பின்தங்கியுள்ள, தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களூக்கு தனி இடப்பங்கீடு வழங்கவேண்டும் என்றும் போராடிவருகிறார்.
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 30%க்கு சற்றும் குறையாத வன்னியர் சமுதாயத்துக்கு 30% இடப்பங்கீடு வேண்டுமென மருத்துவர் ஐயா கோரவில்லை; அதில் மூன்றிலொரு பங்கை விட்டுக்கொடுத்து 20% தனி இடப்பங்கீட்டை தான் 40 ஆண்டுகளாக கேட்டுவரூகிறார். இந்த வன்னியர்களின் தனி இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில், தமிழகத்தின் ஏனைய சமுதாயங்களின் சரியான இடப்பங்கீடு உரிமைகளும் அவர்களுக்கு, கேட்காமலேயே கிடைத்துவிடும்; அதற்காக தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் வன்னியர் போராட்டத்திற்கு ஆதரவு தருவதன் மூலம் தங்களுக்குரிய விகிதாச்சார இடப்பங்கீட்டை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெறமுடியும். எந்தவித மோதல்களுமின்றி அவரவர் சமுதாயங்களுக்குரிய இடப்பங்கீட்டை அடைந்து வாழ்வில் முன்னேறமுடியும்.
இப்படி தமிழக மக்கள் தங்கள் வாழ்வை உயர்த்திக்கொண்டால், தங்கள் வந்தேரி அரசியல் பிழைப்பு காணாமல் போய்விட்டால் என்னாவதென்று சில பிற மாநில வந்தேரிகள், வன்னியர் போராட்டத்துக்கு எதிராக, தமிழக மக்களை தூண்டுவார்கள்; அந்த கெடுமதியாளர்களின் நோக்கத்துக்கு இடமளிக்காமல், தமிழகத்தின் அனைத்து சமுதாய மக்களும், எங்கள் வன்னிய இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவை நல்கவேண்டும். இந்த போராட்டத்தின் மூலம் அனைத்து சமுதாயங்களின் உரிமைகளும், ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். அனைத்து சமுதாயங்களும் தரும், இந்த பேராதரவுக்காக, வன்னிய மக்கள் என்றென்றும் உங்கள் உரிமைக்காக போராட முன்நிற்பார்கள். இந்த போராட்டம் வன்னியர்களின் உரிமையை பெறுவதற்கான போராட்டம் மட்டுமல்ல, உங்கள் அனைத்து சமுதாயத்தினரின் சமூகநீதி உரிமைகளையும் பெற்றுத்தரும் போராட்டமுமாகும்.
வாருங்கள் போராடுவோம்! அரசியல் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை சமூகநீதியாக பெற்று பயனடைவோம்.
போராட்ட வாழ்த்துகளுடன் ஒரு தமிழனாக.....
No comments:
Post a Comment