Tuesday, September 21, 2021

லாபம் ஈட்டி யிருந்தார் மூடியிருக்கமாட்டார்களே.

 மோட்டார் மன்னன் ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறுகிறார் பெறுத்த நஷ்டத்துடன். இவர்கள் செய்த முதலீடு சுமார் ரூபாய் 19000 கோடி இவர்கள் இப்போது சந்தித்துள்ள நஷ்டம் ரூபாய் 15000 கோடிக்கும் மேல். முதலில் ஃபோர்டு மகேந்திரா நிறுவனத்தின் கூட்டாளியாகத்தான் நுழைய இருந்தது. அப்போது உறுவானதுதான் மகேந்திரா சிட்டி நிலப்பரப்பு. அந்த சமயத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராமசாமி உடையார் மூன்றாவது கூட்டாளியாக சேர விரும்பினார். அவர் சார்பாக ஃபோர்டு நிறுவனத்திடம் பேசினேன். அவருக்கு மோட்டார் வாகனத் துறையில் முன் அனுபவம் இல்லை என்பதனால் அவரை ஃபோர்டு நிறுவனம் கூட்டாளியாக்கவில்லை. இதற்கிடையே சட்ட மாற்றங்கள் ஃபோர்டின் நேரடி நுழைவிற்கு வழி செய்தன.

இதற்கு முன்பு சென்னையில் மூடப்பட்ட கார் நிறுவனம் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ். இந்த நிறுவனம் தயாரித்த ஸ்டாண்டர்டு 10, கம்பேனியன், ஹெரால்டு, கேசல், ஸ்டாண்டர்டு 20 வேன் ஆகியவை சந்தையில் அதிகம் விற்பனை ஆகின. இவர்களது போதாத காலம் பெரிய கார்கள் சந்தையில் நுழையாத காலத்தில் இங்கிலாந்தின் ரோவர் மாடலில் ஸ்டாண்டர்டு 2000 என்ற பெரிய காரை அறிமுகப்படுத்தினார்கள். அதில் வந்த நஷ்டத்தில் இருந்து நிறுவனம் மீளவில்லை. சுமார் 15000 ஊழியர்கள் வேலை இழந்தார்கள்.
ஃபோர்டு கம்பெனி திறமையான நிர்வாகத்துடன்தான் இங்கு செயல்பட்டுவந்தது. அவர்களது விளம்பர வாசகம் ‘everything we do is driven by you.
அதில் உள்ள ஸ்லேடையையும் புரிந்துகொள்ளுங்கள். வணிக அறத்தில் ஃபோர்டு எந்த விதத்திலும் விட்டுகொடுத்ததில்லை. அந்த நிறுவனத்தில் உயர் பதவி ஏற்க இருந்த நான் இதை நன்கு அறிவேன்.
ஃபோர்டு நிறுவனத்தினர் தமிழ்நாடு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வந்தபோது அவர்களுடன் சென்றிருந்தேன். அப்போது அமெரிக்க தூதரகத்தில் ஒரு ஃபோர்டு கார் கூட இல்லை. எல்லாம் ஜப்பானிய கார்கள். ஃபோர்டு நிர்வாகிகளாவது ஃபோர்டு வாகனத்தில் பயணிக்கட்டுமே என்று நினைத்த நான் தொழிலதிபர் டி.டி வாசுவிடம் இருந்தும், குமரன் சில்க்ஸ் பி.சி. ராமமூர்த்தியிடமிருந்தும் இரண்டு ஃபோர்டு கார்களை இரவல் வாங்கி ஃபோர்டு நிர்வாகிகளைத் தலைமை செயலகத்திற்கு அழைத்துச் சென்றேன். அன்று மாலை ஃபோர்டு நிறுவனத்தினர் கபாலிஸ்வரர் கோவிலுக்கு வந்தார்கள். அப்போதைய அறங்காவலர் குழுத்தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் யானையை வரவழைத்து ஃபோர்டு அதிகாரிகளுக்கு மாலை அணிவிக்கச் செய்தார். அவர்களுக்கு அதில் பெருத்த மகிழ்ச்சி. கோவிலை வளம் வந்த போது ஸ்வாமி சந்ததி எதிரே சற்றே கூடுதல் நேரம் நின்று வழிபட்டேன். அப்போது ஃபோர்டு கம்பெனியைச் சேர்ந்த கிடியன் வார்தர்ஸ் என்ற உயர் அதிகாரி இவ்வளவு நேரம் என்ன பிரெயர் செய்தீர்கள் என்று கேட்டார். Let ford make cars that we can afford
என்றேன். பிற கார்களுடன் ஒப்பிடும்போது ஃபோர்டு கார்களின் விலை சற்றே அதிகமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதற்கென வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். ஃபோர்டு நிறுவனம் வெளியேறினாலும் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் சிரமப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வாகனத் துறையில் அந்தக் காலத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியவர் ஹென்றி ஃபோர்டு. அமெரிக்காவில் பிறந்த மோட்டார் மன்னன் ஹென்றி ஃபோர்டு (1863-1947) பற்றி கொஞ்சம் நினைத்துப்பார்ப்போமா. மக்கள் குறைந்த செலவில் பயணிக்க T மாடல் காரை உருவாக்கினார். தயாரிப்பில் அசெம்பிளி லைன் என்ற விரைவான தயாரிப்பு புதுமையை அறிமுகப்படுத்தினார். குறைந்த விலை மோட்டார் கார்களை உருவாக்கியது மூலம் அந்தக்காலத்தில் பெரும் பணக்காரரானார் ஹென்றி ஃபோர்டு. இன்றோ பெருத்த நஷ்டத்துடன் ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. காலத்தின் கோலம்.

இரண்டு காரணங்கள்:
1. ஃபோர்டு தரத்தில் சமரசம் செய்யாததால் விலையைக் குறைக்க முடியவில்லை.
2. இந்தியாவில் பெருகிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை, தேவையை விட அதிகம். மேலும் சில நிறுவனங்கள் ஃபோர்டைத் தொடரலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...