காலம் ரொம்ப கெட்டுப் போச்சுன்னு சொல்றாங்க..சில பேர் கல்யாணத்துக்கு பண்ற செலவுல பாதியைக்கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை...
பணக்கார பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவை விட, பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது...
சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை...
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு, பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்...
சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள். பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்...
சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும், பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்...
நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில், ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்...
பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன...
கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும், கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் வறுமையான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
இத்தகைய சூழ்நிலையில், நாம் ஒரளவு மேன்மையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து, இந்த வாழ்வை கொண்டாடி மகிழ்வோம்...
No comments:
Post a Comment