தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்கும்படி திமுக எம்.எல்.ஏ., உதயநிதி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. உதயநிதி தனது வேட்புமனுவில், தன் மீதான குற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. தவறான தகவலை தெரிவித்து உள்ளார். அதனால், அவரது வெற்றி செல்லாது என தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கும்படி உதயநிதி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை அக்.,1ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
No comments:
Post a Comment