*வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியன*
சில காயங்கள்
" *மருந்தால்* " சரியாகும்.
சில காயங்கள்
" *மறந்தால்* " சரியாகும்.
" *ஆடம்பரம்* ''
அழிவைத்தரும்.
" *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.
கார் இருந்தால்
" *ஆடம்பரமாக* " வாழலாம்
.
மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.
" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.
*வீரன்* சாவதே இல்லை.
" *கோழை* " வாழ்வதே இல்லை.
தவறான பாதையில்
" *வேகமாக* " செல்வதைவிட.
சரியான பாதையில்
" *மெதுவாக* " செல்லுங்கள்.
மனிதனுக்கு ABCD
" *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".
ஆயிரம் பேரைக்கூட
" *எதிர்த்து* " நில்.
ஒருவரையும்
" *எதிர்பார்த்து* " நிற்காதே.
தேவைக்காக கடன்
" *வாங்கு* ".
கிடைக்கிறதே என்பதற்காக
" *வாங்காதே* ".
உண்மை எப்போதும்
" *சுருக்கமாக* " பேசப்படுகிறது.
பொய் எப்போதும்
" *விரிவாக* " பேசப்படுகிறது.
" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான்.
*வண்ணங்களில்*
" இல்லை வாழ்க்கை.
மனித
" *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை
" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.
" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.
வியர்வை துளிகள்
" *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை
" *இனிப்பாக* " மாற்றும்.
*கடனாக* இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.
" *செலவு* " போக மீதியை சேமிக்காதே.
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.
உன்னை நீ செதுக்கி கொண்டே இரு
" *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.
உறவினர்களில் யார் முக்கியம் என்பதை
" *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.
கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு
" *முட்டாள்* " என்று தெரியும்.
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும்.
பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை
" *போற்றும்* ".
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".
பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம்
" *பொய்* ".
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".
மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன்
" *புத்திசாலி* ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன்
" *திறமைசாலி* ".
கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.
குறைகளை
" *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை
" *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.
அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* "
விழுதல் என்பது
" *வேதனை* ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது
" *~சாதனை*~ "
*ஆனந்தமே ஆரோக்கியம்*
*வாழ்க வளமுடன்*
No comments:
Post a Comment