Monday, September 20, 2021

நீட்டை எதிர்க்கும் யாருக்குமே சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை.

 தேர்தலில் ஜெயிக்க திமுகவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 53 ல் 160 வது பாராவில்

“ஆட்சி அமைத்த முதல் சட்ட சபைக் கூட்டத் தொடரிலேயே நீட்டை ரத்து செய்து சட்டமியற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும்”
என்று கூறி புலி வாலைப் பிடித்துக் கொண்டார்கள். இனி விட்டால் கடித்துவிடும்.
பல சட்ட நிபுணர்களை வைத்துள்ள திமுக, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுகளை எதிர்த்து வழக்கு தொடுக்காமல் இருப்பது ஏன்? வழக்கில் தோல்வியே மிஞ்சும். பிறகு நீட்டை வைத்து காலத்துக்கும் அரசியல் செய்ய இயலாது என்பதால்தான்.
1976 ல் அவசரநிலை அமலில் இருந்த போது இந்திரா அரசினால் 42வது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் “கல்வி” பொதுப்பட்டியலுக்கு போனது. அதன் பிறகு 1999 முதல் 2014 தேர்தல் வரை பல வருடங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற முயலவில்லை. பசையுள்ள இலாகாக்களை வாங்கி கல்லா கட்டுவதிலேயே குறியாக இருந்தது.
நீட் மசோதா நாடாளுமன்றத்தில் 2010 ல் நிறைவேறும் போதும் திமுக மத்தியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தது.
முதல் நீட் தேர்வு 2013 மே 5ம் தேதி நடந்தபோதும் திமுக மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தது.
நீட் தேர்வுகளை எதிர்த்து வேலூர் கிரிஸ்ட்டியன் மருத்துவ கல்லூரி உள்பட பல தனியார் கல்லூரிகள் வழக்கு தொடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரின. இதை விசாரித்த நீதிபதிகள் குழுவின் தலைவர் ஓய்வு பெறும் நாளன்று நீட் தேர்வுகள் செல்லாது எனவும், முடிவுகள் வெளியிட கூடாது என்றும் தடை விதித்து தீர்ப்பளித்து வீட்டுக்குச் சென்று விட்டார்.
மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து AIMC அப்பீல் செய்ததை “நீதிபதி தவே” தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. இந்த பெஞ்ச்சில் இருந்த நீதிபதிகள் முந்தைய தீர்ப்பிற்கான கோப்புகளை அலசி ஆராய முற்பட்ட போது தான் ஒரு உண்மை புலப்பட்டது. அது, முந்தைய தீர்ப்பை வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதியும், குழுவில் இருந்த மற்ற நீதிபதிகளும் கூடி விவாதிக்கவில்லை என்பதும், அப்படி விவாதித்து முடிவெடுத்து பதிய வேண்டிய மினிட்ஸ் ஏதும் இல்லாமல் மினிட்ஸ் கோப்பு வெறும் தாள்களாகவே இருந்தன என்ற உண்மையைக் கண்டனர். இதன் காரணமாக அந்த “நீட் செல்லாது” தீர்ப்பை வாபஸ் வாங்கிக் கொண்டனர். இது நடந்தது 2016 ஏப்ரலில். இதற்கிடையில் 2013 ல் ஒரே ஒரு முறை மட்டுமே ஜெயலலிதா அரசு நீட் தேர்வுக்கு “தற்காலிக விலக்கு” கோரி பெற்று இருந்தார். அதற்கு பிறகு விலக்கு அளிக்க நீதி மன்றம் மறுத்து விட்டது.
2017 ல் நீதிபதி கிருபாகரன் நீட் விலக்கு கோருவதைக் கண்டித்து விமர்சனம் கூட செய்திருந்தார்.
2020 செப்டம்பரில் மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், சட்டீஷ்கர் & மே வங்கம் ஆகிய 6 மாநிலங்கள் நீட் தேர்வை ஒத்திவைக்க (ரத்து செய்ய அல்ல) கோரியதையே உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேற்கண்டவற்றில் பிரதமர் மோடி எங்கு வந்தார் ?
இவ்வளவு உண்மை சரித்திரங்கள் இருக்க, திரும்ப திரும்ப ஒரே பொய்யை சொல்லி அதை நிஜமாக்க முயலும் திமுக, திக ஓசி சோறு தலைகள், காங்கிரஸ், கம்மிகள், தமிழ்நாட்டில் உள்ள இதர 5, 10 , 15 கோடி என்று திமுகவிடம் விலை போன சில்லு வண்டு கட்சிகள் & திருமாவளவன் போன்றோர் மக்களை முட்டாளாக்க முயல்வது மகா அயோக்கியத் தனம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...