ஆப்கனில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் எனும் பயங்கரவாத கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவ்வபோது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் குந்தூஸ் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

No comments:
Post a Comment