*தினமும் 2 ஏலக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?*
ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதில் நன்மைகள் இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும்
அதன் வாசனையே அந்த உணவின் நுகர்வை அதிகரிக்கிறது.
ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது.
இரண்டிற்குமான ஆரோக்கிய நன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன.
அப்படி என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக இருக்கிறது.
அதேபோல் மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது.
அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என
உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும்
அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது.
வாய் துர்நாற்றம், வாய் , பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது.
வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது.
பற்களின் ஈறுகளையும் வலுவாக்குகிறது.
ஆயுர்வேத வல்லுநர்களின் கூற்றுப்படி
தினம் தூங்கும்முன் இரண்டு ஏலக்காய்களை சாப்பிடுவதால் இல்லற வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும் என்கின்றனர்.
எனவே தினசரி ஏதாவதொரு வகையில்
அல்லது தினசரி டீயில் கூட ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்துவர
இத்தனை நன்மைகளைப் பெறலாம்.
No comments:
Post a Comment