Wednesday, October 13, 2021

கணக்கு சரியாக இருக்காதே!

 தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க நகைகளை உருக்கி, வங்கியில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்ய, தி.மு.க., அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.


கோவில் நகையை, வங்கி 'லாக்கரில்' வைத்திருந்தால் ஆளுங்கட்சியினர் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். அதிகாரிகள் துணையுடன் அங்கு போலி நகைகளை வைத்து, தங்கத்தை களவாடி விடுவர். அங்கு இருப்பது தங்கமா, 'கவரிங்'கா என்பதை யார் அறிய முடியும்? ஆட்சி மாறினால், ஒரு வேளை குற்றம் நடந்தது தெரிய வரலாம். அப்படி இருந்தாலும், அது தொடர்பான வழக்கு 100 ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். கோவில் நகையை திருடியோர் சுகபோகமாக வாழ்ந்து, மறைந்து விடுவர்.


latest tamil news


அந்த நகையை உருக்கி விற்று, பணமாக்கி, வங்கியில் 'டிபாசிட்' செய்தாலும் சிக்கல் வரும்.உருக்கிய நகையின் எடையை குறைத்து காட்டுவர். நகை மதிப்பீட்டில் குளறுபடி செய்து, குறைந்த தொகைக்கு விற்பனை செய்து மோசடி செய்வர். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதிகாரிகள் சொல்வது தான் கணக்கு!அதாவது, கோவிலில் இருந்த 100 கிலோ தங்கத்தை உருக்கியபோது, அதில் வெறும் 10 கிலோ தான் தேறியது என கணக்கு காட்டினால், யார் ஆய்வு நடத்த முடியும்?

நேர்மையான அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் சல்லடை போட்டு அல்லவா தேட வேண்டியது உள்ளது! 'சிவன் சொத்து' என்ற பயம், நாத்திக கட்சியான தி.மு.க.,விடம் எப்படி இருக்கும்? நம் அரசியல்வாதிகள் ஆலத்திலும், கோலத்திலும் நுழைந்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதில் கை தேர்ந்தோர்.அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருப்பதே, கோவில் நகைகளுக்கு பாதுகாப்பு!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...