Tuesday, October 12, 2021

அவர் சாவில் தமிழக மக்களுக்கு பாதி பழியும் காங்கிரசுக்கு மீதிபழியும் இருக்கின்றது.

 _வீட்டுக்காவலில் வைத்து அவமதித்த ஒரே காரணத்தால் மானஸ்தன் மரணம் அடையச் செய்த இந்திரா காந்திக்கு நன்றி..._

_மெரினாவில் பிச்சை எடுத்து இடம் வாங்கிய கருணாநிதி, அன்று முதல்வராக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக காமராஜருக்கு மெரினாவில் இடம்தர மறுத்ததற்கு நன்றி..._
_காமராஜர் ஒன்றும் பிரம்மச்சாரி கிடையாது, சுவிஸ் பேங்கில் கோடிக்கணக்கில் பணம் வைத்து இருக்கிறார் என்று பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த அண்ணாதுரைக்கு நன்றி..._
_இத்தனையும் மறந்து தனக்காக உழைத்த தலைவரையும் தொலைத்து கேடுகெட்டு போய் இருக்கும் மக்களுக்கும் நன்றி..._
_______________________________
அந்த மனிதர் செய்த தவறு இந்தியனாய் பிறந்தது, இந்தியனாய் வாழ்ந்து இந்தியாவுக்காக உழைத்தது
இந்திய தேசியம் பேசியவர் என்பதால் திராவிட கட்சிகள் வரிந்துகட்டி விரட்டின, உண்மையான தேசியம் பேசியதால் காங்கிரசும் விரட்டியது
அந்த மனிதனின் கடைசி காலத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
தான் பார்த்து பார்த்து உருவாக்கிய தமிழ்நாடு தன்னை தோற்கடித்ததும், தான் பாடுபட்டு வளர்த்த தேசிய கட்சி அதுவும் தான் தூக்கிவளர்த்த இந்திரா தன்னை விரட்டியதும் அவரை மிகமிக பாடுபடுத்தின‌
அதை எல்லாம் தாங்கிகொண்டவருக்கு இரண்டாமுறை வெள்ளையன் ஆட்சி வந்தது போன்ற மிசா காலத்தை பார்க்க சகிக்கவில்லை
காந்தியவாதியெல்லாம் சிறைக்கு செல்வதை கண்டு மனம் வெதும்பினார்
நாட்டுக்காக எல்லாம் இழந்த மனிதனுக்கு எங்கு செல்வது? யாரிடம் புலம்புவது என்றும் தெரியவில்லை
காந்தி,நேரு, பட்டேல் , சாஸ்திரி என பெரும் பிம்பங்களுடன் வளர்ந்தவருக்கு திமுகவின் சுயநலமும் இந்திராவின் ஏகாதிபத்தியமும் வெறுப்பை தந்தன‌
அம்மனிதன் தன் துயரத்தை மனம்விட்டு சொல்லவும் யாருமில்லை
கடைசியாக கருணாநிதி அவரிடம் சென்று நின்றார்
ஆம் எந்த காமராஜரை 10 வருடம் கரித்துகொட்டி, இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லி அவரை வீழ்த்திய கருணாநிதி அவரிடம் வந்தார்
எதற்கு அவரை முதல்வராக்கவா?
இல்லை இந்திராவுக்கு எதிராக காமராஜரை போராட அழைக்க வந்தார்
அன்றே மனமார செத்தார் காமராஜர், ஆம் முன்பொரு முறை பத்திரிகையாளர்கள் காமராஜரிடம் நீங்கள் பல விஷயங்களை பேசுவது மறுபடி முதல்வராக என கருணாநிதி சொல்கின்றாரே என கேட்டதற்கு "அவரெல்லாம் முதல்வரானபின் நான் அந்த பதவிக்கு ஆசைபடுவேனாண்ணேன்" என சொன்ன அந்த காமராஜர்
ஆம், காட்சிகள் இப்படி எல்லாம் மாறுவதை அவரால் ஏற்கமுடியவில்லை, அவருக்கு மானமிருந்தது
சொந்தகட்சி விரட்டுவதும் அதை பயன்படுத்தி எதிர்கட்சி தன்னை வைத்து ஆட துணிந்த அவமானத்தை தாங்காமல் தவித்தார்
அவரின் மனதை அவர் வீட்டு நடராஜர் சிலை ஒன்றே அறியும் என்பார்கள்
இதே அக்டோபர் 2ம் தேதி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார், வீட்டிற்கு சென்று படுத்தவர் அதன் பின் எழவே இல்லை, அவரின் ஆன்மா காந்தியத்தில் கலந்திருந்தது உலகுக்கு புரிந்தது
அவரை கொன்றவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்தினார்கள், அவர் சாக காரணமாக இருந்தவர்கள் அவருக்காக உருகி உருகி அறிக்கைவிட்டார்கள்
1967ல் பாதி செத்த காமராஜரை மிசா காலம் மீதியினை கொன்றது
அவர் சாவில் தமிழக மக்களுக்கு பாதி பழியும் காங்கிரசுக்கு மீதிபழியும் இருக்கின்றது.
அம்மனிதனுக்கு பரிகாரம் செய்யாமல் தமிழகமும் காங்கிரசும் வாழபோவதுமில்லை.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...