#லக்ஷ்மி #குபேர பூஜையைத் தீபாவளித் திருநாள் அன்று மட்டும்தான் செய்யவேண்டுமா, மற்ற நாள்களிலும் செய்யலாமா? எப்படி வழிபடவேண்டும்?
செல்வத்துக்கு அதிதேவதையான ஶ்ரீலக்ஷ்மி தேவியையும் செல்வத்தைக் காப்பாற்றி நமக்குத் தகுந்த நேரத்தில் அளிப்பவரான குபேரனையும் தீபாவளி திருநாளன்று சிறப்பாக வழிபடுவது நமது மரபு. எனினும் அன்று மட்டும்தான் வழிபட வேண்டும் என்பது இல்லை.
ஒரு வருடத்தில் முக்கியமான சில நாள்கள், ஶ்ரீலக்ஷ்மியை ஆராதிக்கச் சிறந்த நாள்களாக கூறப்பட்டுள்ளன. ‘ச்ரவணா...’ என்று தொடங்கும் ஸ்லோகத்துக்கு ஏற்ப, ஆவணி, ஐப்பசி, வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வளர்பிறை பஞ்சமி திதி முதல் தேய்பிறை பஞ்சமி திதி வரை சிறப்பாக பூஜை செய்யலாம்.
ப்ரதமை, த்விதீயை, த்ருதீயை, பஞ்சமி, ஷஷ்டி, ஸப்தமி, தசமி, த்வாதசி, திரயோதசி மற்றும் பெளர்ணமி திதி ஆகியவையும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
வ்ருத்தி மற்றும் வைத்ருதி யோகங்கள் நல்ல பலன்களை அளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பாலவம், கௌலவம், கரஜை ஆகிய கரணங்கள் க்ஷேமங்கள் அளிக்கக்கூடியவை.
இவையெல்லாம் ஶ்ரீலக்ஷ்மியை வழிபட சிறந்த நாட்களாக கூறப்பட்டுள்ளன. எனினும், நாம் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் அன்னையை வழிபட்டு அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெறலாம்.
No comments:
Post a Comment