ஐப்பசி மாதத்தில் இரவும், பகலும் சமமாக இருப்பதால் இதை *துலா மாதம்* என்பர்!
துலா மாதத்தில் காவிரியில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவிரியில் நீராடினால் மஹாவிஷ்ணுவின் அருள் கிட்டும் என்கிறது "துலா காவேரி புராணம்!"
மேலும் சூரிய உதயத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் காவிரியில் நீராடுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது!!
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால் பிரம்ம கங்கை, காவிரியில் கலப்பதாக ஐதீகம்!
கங்கை உள்பட எல்லா நதிகளும் காவிரியில் துலா ஸ்நானம் செய்து தங்கள் மீது பதிந்த பாபங்களை போக்கிக் கொள்ள, காவிரியோ என்றும் ரங்கனின் திருவடியை வருடி பாய்ந்தோடுவதால், என்றுமே பாபவிமோசனத்தோடு, கங்கையைவிட ஏற்றமும் பெறுகிறது!
-ஆதி-இடை-கடை எனும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, அவன் திருவடியைத் தழுவி வணங்கும் பேறுபெற்றது காவிரி!
-காவிரியில் துலா ஸ்நானம் செய்து ஶ்ரீரங்கநாதனை வழிபட்டதன் பலனாக சந்தனு மஹாராஜா, பீஷ்மரை புத்திரராக பெற்றார்!!
"கங்கையில் புனிதமாய காவிரி நடுவுபாட்டு*
பொங்குநீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்*
எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கைகண்டும்*
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!"
-தொண்டரடிப்பொடி ஆழ்வார் (திருமாலை)
No comments:
Post a Comment