Wednesday, October 6, 2021

அவசர நவராத்திரி விதிமுறைகள் அரசு அறிவிப்பு:

 1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.

2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.
3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு. பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.
5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.
6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.
7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.
9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க ஒவ்வொரு படியிலும் உங்கள் செலவில் இரண்டு போலீஸ் பொம்மைகள் வைக்கப்பட வேண்டும். போலீஸ் பொம்மைகள் மேலே சொன்ன ஐம்பது பொம்மைகள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.
10. முக்கிய குறிப்பு: போலீஸ் பொம்மையின் காலடியில் அவரவர் விதிமீறலுக்கேற்ப நிஜ நூறு ரூபாய் நோட்டுகளை வைக்கலாம்.
அனைவருக்கும் இனிய பொம்மைத்திருநாள்
வாழ்த்துகள்
பின்குறிப்பு: கொலுவுக்கு படிகளாக உபயோகப்படும் கம்ப்யூட்டர் டேபிள், அட்டை டப்பா, ஸ்டூல், டைனிங் டேபிள் போன்றவற்றை யாரேனும் ஆக்கிரமித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அதிகாரிகள் விரைந்து வந்து ஆக்கிரமிப்புகளை நீக்கி படிகளைக் கையகப்படுத்தித் தருவார்கள்.
மேலே சொன்ன விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...