ஒரு ஏழை கூலி தொழிலாளி தன் மனைவியை பிரசவத்திற்கு ஹாஸ்ப்பிடலில் சேர்க்கிறார் சற்று ஆபத்தான நிலை B.+ve ரத்தம்
தேவைப்படுகிறது எங்களிடம் ரத்தம் ஸ்டாக் இல்லை யாராவது இரத்ததானம்
கொடுப்பவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள் என்கிறார்கள் ஊரடங்கு காலத்தில் எங்கு செல்வது யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் அந்த ஏழை கூலி தொழிலாளி பித்து பிடித்தது போல் சாலையில் அழைந்து திரிகிறார் போலீசார் பிடியில் சிக்கி விசாரித்த போது நடந்ததை கூறுகிறார் அங்கு பனியில் இருந்த ஒரு போலீசார் வாருங்கள் எனது ரத்தம் அந்த குரூப் என்று ஹாஸ்ப்பிடல் அழைத்து சென்று ரத்தம் தருகிறார் பிரசவம் நல்ல முறையில் நடந்து முடிந்து தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் ஏழை கூலி தொழிலாளி கண்ணீர் கலந்த நன்றி தெரிவிக்கிறார்
சற்றும் அலட்டிக்கொள்ளாமல் விடை பெற்றார் அந்த போலீஸ்காரர். இந்த தகவல் தீயாக பரவி கமிஷனர் அலுவலகத்தில் தெரிந்து அந்த போலீஸ்காரரை அழைத்து பாராட்டி 25000 ரூபாய் சன்மானமாக கொடுத்துள்ளார்கள் அதை பெற்று கொண்ட அந்த போலீசார் ஹாஸ்பிடல் சென்று அந்த கூலி தொழிலாளி மருத்துவ செலவு ஃபில் கட்டிவிட்டு மீதீ தொகையை அந்த ஏழையிடம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இறைவன் வடிவில் வந்து உதவி செய்த அந்த போலீஸ்காரர் பெயர் சையதுஅபுதாஹீர் திருச்சி சரக காவலர்
மனிதம் காத்த சகோதரனுக்கு எங்கள் நட்பு பூந்தோட்டம் நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் இதயம் கனிந்த
பாராட்டுக்கள்..!!
Congratulations
No comments:
Post a Comment