நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டு பிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதை பெரிது பண்ணாதே..உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ... ஒன்றை மட்டும் தெரிந்து கொள்...
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள்... அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே...அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள். அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும்... அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது..இதுதான் வாழ்க்கையின் உண்மை. அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.. நீ ஒதுங்கி நின்று வேடிக்கை பார்... வாழ்வு இனிக்கும்...
No comments:
Post a Comment