Thursday, October 7, 2021

இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...!

👆ஊடகத்தின் தேவையை ஒரு போதும் உணராத பிஜேபி மிகப்பெரிய இழப்புகளை உ.பி.யில் சந்திக்கும் என்றே தோன்றுகிறது.
உ.பி. மாநிலத்தில் மத்திய அமைச்சரின் மகனுடைய கார் ஏறி விவசாயிகள் பலி..
- இது செய்தி..
முழு உண்மை என்ன? மத்திய அமைச்சர் மகன் காரை ஓட்டி செல்லவில்லை.
போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் காரின் கண்ணாடி உடைந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் மோதியது.
காரின் டிரைவரும், அதில் வந்த பாஜகவினர் 3 பேரும், ஆக 4 பேர் போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டு, கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கே வராத மத்திய அமைச்சர் மகன், விவசாயிகளை கார் ஏற்றி கொன்றதாக போராட்டம் குழுவினர் சொல்வதை மட்டும் தலைப்புச் செய்தியாக போடுகின்றன விலை போன பல தமிழ் ஊடகங்கள்.
அன்று குஜராத் அதானி குத்தகைக்கு எடுத்த துறைமுகத்தில் போதை பொருள் வந்து இறங்கியது என்றனர்! இன்று ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் கப்பலோடு சிக்கும் போது அவர்களுக்கு மதரீதியிலான தார்மீக ஆதரவு தருகிறார்கள்.! ஒரு காலத்தில் தமிழக விளை நிலங்கள் அதானி கார்ப்பரேட்டிற்கு பிடுங்கி கொடுக்கப்படும் என்று பரப்புரை செய்தனர்.!
ஒரு பிரிவினைவாதி ஆறு வருடத்திற்கு முன்பே சொன்னார் மோடி ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளை இழுத்து மூடிவிடுவார்கள் என்றார்! அதை நம்பிய தமிழக டாஸ்மாக் அடிமைகள் பலர் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு ஓட்டு போடாமல் தவிர்த்தனர்.! இது போன்ற அனைத்து பரப்புரைகளும் பிஜேபியின் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி போல மக்களால் எண்ணப்பட்டு அனர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. ஊடக பலமின்மையால் பதிலடி கொடுக்க முடியாமல் போய் பிஜேபியின் நற்பெயருக்கு களங்கம் விளைந்து கொண்டிருக்கிறது.
மோடிதான் காரை ஓட்டிக் கொண்டு வந்தார், அமித்ஷாவும் யோகிஜியும் காருக்குள் இருந்தனர் . திட்டமிட்டு விவசாயிகள் (?) மேல் ஏற்றி கொன்று விட்டு ஓடி விட்டனர் என்று ஓர் பொய் செய்தியை பரப்பினால் கூட பிஜேபி எதிர் வினையாற்றவோ /பதிலடி கொடுக்கவோ தெம்பில்லாமல் ஊடக அநாதையாக நிற்கின்றதே!
அசாத்திய வலிமை மிக்க டைனோசர் இனம் அழிந்ததற்கு, உயிரியல் அறிஞர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? டைனோசருக்கு வலி உணர்வு நரம்புகள் சிறப்பாக இல்லாததே ஆகும். பசி கொண்ட ஒரு புலியோ, சிங்கமோ டைனோசரின் பின் கால்களை குதறி தின்றால் கூட ,அந்த வலி டைனோசருக்கு தெரியாதாம். நடக்கப் போகும் போது, கால் ஓர் சைடாக இழுக்கும் போது தான் ஓர் காலை இழந்ததையே டைனோசரின் மூளை உணருமாம்!
அதைப்போல் எம்மைப் போன்ற தேசபக்தர்களின் வேதனையை உணரும் சக்தி பிஜேபிக்கு இல்லாமல் போய்விட்டதே!
தனது உடல் பாகம் தின்னப்படுவதை அறியாத டைனோசரைப் போன்ற நிலையில் பிஜேபியை ஊடக பலமற்ற நிலை வைத்திருக்கிறது. கடந்த காலத்தில் நமது பாஜக முன்னாள் மத்திய அமைச்சரே சொன்னார் நமக்கு எதற்கு ஊடகம் என்று, இன்று ஆதரவற்ற நிலையில் புறக்கணிக்கப் பட்டுள்ளார். இனியாவது உணர்ந்தால் சரி..
தேசத்தின் நலன் வேண்டும் எம் கதறலை எதிர்ப்புணர்வாக புறந்தள்ளவேண்டாம்.
Stupidity cannot be ignored in vote politics என்று ஒரு அனுபவ மொழி அரசியல் உலகில் உண்டு. இழிவுகளை சுமக்கும் எதிர்கட்சிகள் இன்று அந்த stupids களை குறிவைத்து மிகச்சிறப்பாக அரசியல் செய்கிறது. அந்த எதிர்மறை அரசியலை திறமையுடன் எதிர்கொண்டு தீர்க்காமல் பிஜேபி தூங்கினால்.........
தேசத்தின் நலன் கருதிய எம் கூக்குரலை செவிமடுக்கத் தவறினால்...............
எல்லையில் பகை சூழ்ந்த எதிரியும், உள்நாட்டில் ஹிந்து விரோதிகளும் பிஜேபி என்று வீழும் எப்போது இந்தியாவை 32 துண்டுகளாக்க காலம் கனியும் என்று காத்திருக்கின்றனர்.!
எச்சரிக்கை!
Jai Hind!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...