கொலு வைத்திருப்பவர்கள் பொம்மைகளை திரும்ப பேக் செய்யும் போது, அடை மழையாக இருந்தால், ஒன்று இரண்டு நாட்கள் காத்திருந்திருந்து, பின்னர் நல்ல வெயில் காய்ந்தபின் பேக் செய்யவும்.
மழைக்காலங்களில் போது room temperature குறைந்தும், ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கும். பொதுவாக மண், மற்றும் காகிதக்கூழ் பொம்மைகள் ஈரப்பதத்தை அதிகம் உள்வாங்கும்.
ஈரப்பதத்தை உள்வாங்கிய நிலையில், பேப்பர் மேஷ் பொம்மைகளை பேக் செய்யவேண்டாம்.
இரண்டொரு நாளில் நல்ல வெயில் வந்த நிலையில், இந்த ஈரப்பதம் இருக்காது. அப்போது பேக் செய்யலாம் .
பொம்மைகளை நேரடி வெய்யிலில் வைப்பதையும் தவிர்க்கவும்.
பொம்மைகள் பேக் செய்வதற்கு முன், பிரஷ் அல்லது மெல்லிய துணி உபயோகித்து, அதன் மீது உள்ள தூசியை அகற்றவும்.
இவ்வாறு செய்வதின் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு தூசி பொம்மைகள் மீது படிந்திருப்பது தவிர்க்கப்படும்.
அடுத்தவருடம் கொலுவிற்கு பொம்மைகளை எடுக்கும் போது சுத்தம் செய்யும் பணி அதிகம் இருக்காது.
பொம்மைகளை பாலிதீன் கவர் கொண்டு பேக் செய்தால், அதிகம் தூசிபடிவதில் இருந்து காக்கலாம்.
பொதுவாக பேக் செய்யும் மெட்டீரியலும் தூசியாகத்தான் இருக்கும்.
அதிலிருந்தும் இந்த பாலிதீன் கவர்கள் பொம்மைகளை காக்கும்.
No comments:
Post a Comment