Monday, October 18, 2021

நானாகஇருந்தால்..

 வருமான வரியை ரத்து செய்து விடுவேன்.அதற்கு பதிலாக கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுப்பேன் ஏன் எதனால் . என் பதில் இதோ:

01. கஷ்டப் பட்டு சம்பாதிக்கிறோம். அதில் முப்பது சதவிகிதத்தை வரியாகச் செலுத்த வேண்டி இருக்கிறதே என்று அங்கலாய்க்காதவர்கள் யார்? எல்லோருக்குமே வருமான வரி என்பது வேப்பங்காயாய் கசக்கிறது. இதனால்தான் நாட்டில் கறுப்புப் பணம் உருவாகிறது. பொய் சொல்வது, பொய் கணக்கு காட்டுவது என்றெல்லாம் ஒழுங்கீனங்கள் உருவாகக் காரணமே இந்த வருமான வரிதான். யாருக்குமே பிடிக்காத விஷம் இது. எனவே என் முதல் பட்ஜெட்டிலேயே வருமான வரி என்ற வரியையே ரத்து செய்து விடுவேன்.
02. சரி. அப்ப அரசாங்கம் வருமானத்துக்கு என்ன செய்யும்? பாலங்கள் போடுவது, ஆஸ்பத்திரிகள் கட்டுவது, பள்ளிக் கூடங்கள் கட்டுவது எல்லாம் எப்படி நடக்கும்? நியாயமான கேள்விதான். வருமான வரி என்பதை எடுத்து விட்டு செலவு வரி என்று கொண்டு வருவேன். அது என்ன? உதாரணமாய் சென்னையில் ஒருவர் குடும்பத்தோடு சினிமா பார்க்கப் போகிறார். நாலு பேர் என்று வைத்துக் கொள்வோம். நாலு டிக்கெட் 480 ரூபாய். உள்ளே போனால் பாப்கார்ன், சேண்ட்விட்ச் என்று இன்னொரு 300 ரூபாய். போக வர ஐநூறு என்று கொள்வோம். எவ்வளவு ஆச்சி? 1280 ஆச்சா? அவருக்கு அது பெருமையாகத்தான் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டுக் காரர்களிடம், சே, ஒரு சினிமா பார்க்கணும்னா குறைஞ்சது ஆயிரம் ரூபாய் ஆயிடும் போல என்று போலியாகப் பெருமைப் பட்டுக் கொள்வார். ஒரு சினிமா பார்க்க 1280 ரூபாய் செலவழிக்க அவர் தயங்குவது இல்லை. இன்னுமொரு இருபது ரூபாய் செலவு அதிகமானாலும் அவர் கவலைப் பட மாட்டார். வருந்த மாட்டார். அந்த இருபது ரூபாய்தான் வரி.
03. இதே மாதிரி ஹோட்டலுக்குப் போகிறோம். செலவைப் பற்றி அஞ்சுவதில்லை. அங்கே ஒரு இருபது ரூபாய் அதிகமாக வரி போடலாம்.
04. கம்பெனிகள் காட்டும் கணக்கைப் பார்க்கவே வேண்டியதில்லை. சேல்ஸ் எவ்வளவு? அதில் முப்பது சதம் வரி. லாபக் கணக்கோ, நஷ்டக் கணக்கோ எனக்குக் கவலையில்லை.
05. நகைகள், கார், விலையுரந்த காலணிகள், செல்போன்கள் என்று வாங்கும் போது அங்கங்கே பத்து, இருபது என்று வரியை உயர்த்தினால் யாரும் கவலைப் படப் போவதில்லை.
அதாவது வருமானத்தில் இருந்து நேரடியாக வரியைப் பிடிக்காமல் மறைமுகமாக செலவினங்களின் மீது வரி போட்டால் மக்களுக்கு வலிக்கவே வலிக்காது. அதுதான் ஏற்கனவே ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என்று இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது. ஆனால் முப்பது சதம் இல்லையே. வருமான வரியை நீக்கி விட்டு மறைமுக வரியை ஐம்பது சதவிகிதம் ஏற்றி விடுவேன். அரசுக்கு வருமானமும் வரும். ஐயோ வரி செலுத்த வேண்டுமே என்று யாரும் அழவும் மாட்டார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...