Saturday, October 16, 2021

வாஸ்து முறைப்படி நான்கு மூலைகளில் வைக்கவேண்டிய, வைக்ககூடாத பொருட்கள் என்ன...?

 வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான 

ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி 

ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய, இருக்கக்கூடாத பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.

 

ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம்.

 

ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும்  அடைத்து வைக்கலாகாது.

வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது.

 

வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.

 

அக்னி மூலை - தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும்  மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.

 

வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும்,  அடுப்பும் அமைக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...