பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் தமது 80 வயதைக் கடந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். 60களில் அரசுப்பணியில் இருந்தபடியே அமெச்சூர் நாடகங்கள் வழியே நடிகராகி, ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நாயனாக அறிமுகமானார்; இப்படத்தின் நாயகி ஜெயலலிதார். இதுதான் ஜெயலலிதாவிற்கும் முதல் படம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, October 13, 2021
நடிகர் ஸ்ரீகாந்த்.
சுமார் இருநூறு படங்களில் நடித்துள்ள ஸ்ரீகாந்திற்கு வெகுமக்களின் கலை ரசனையில் தனியிடம் உண்டு. நகைச்சுவை, எதிர்நாயகப் பாத்திரம், குணச்சித்திரம் என்று பலவகையிலும் திறனைக் காட்டியவர் ஸ்ரீகாந்த். அவர் ஏற்று நடித்த தங்கப்பதக்கம் ஜெகனும் ராஜபர்ட் ரங்கதுரை பாஸ்கரும், எதிர்நீச்சல் கிட்டுவும் இன்னமும் கூட வெகுமக்களிடம் கவனத்தைப் பெறும் பாத்திரங்களாகும். ரஜினி முதன்முதலாக கதாநாயகனாக நடித்த பைரவி படத்தில் அதுவரை காட்டப்பட்டு வந்த கிராமத்து பண்ணையார் தோற்றத்திலிருந்து விலகி 'நவநாகரீக பண்ணையார்' தோற்றத்தில் மிரட்டியிருப்பார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் வில்லன்; ரஜினி நாயகன். ஆனால், படத்தின் டைட்டிலில் ஸ்ரீகாந்தின் பெயருக்கு அடுத்துதான் ரஜினி பெயர் வரும்.
ஸ்ரீகாந்தின் இலக்கிய வாசிப்பு ஆர்வம் அவரை ஜெயகாந்தனிடம் சேர்த்தது. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆகிய நாவல்கள் படமாக்கப்பட்ட போது அவற்றின் நாயகனாக எதார்த்த நடிப்பைக் கொடுத்து முத்திரைப் பதித்திருப்பார் ஸ்ரீகாந்த்.
தமிழ்த்திரையின் மூத்த நடிகரான ஸ்ரீகாந்திற்கு அஞ்சலி.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment