ஏ சங்கி...! நான் ஒடுக்கபட்டவன், தாழ்த்தபட்டவன் என் வலி உனக்கு புரியாது
உன்னை யார் ஒடுக்கினார்கள், தாழ்த்தினார்கள்?
அது சாதி, மதம், பிராமணன், இந்த சமூகம்
ஒடுக்கபடுதல், தாழ்த்தபடுதல் என்றால் என்ன?
என் உழைப்பை உறிஞ்சி என்னை சக்கையாக எறிவது, என்னை தாழ்நிலையிலே வைத்திருப்பது
சரி, உன்னை உறிஞ்சியதாக நீ நம்பும் பிராமணன் என்ன சேர்த்துவிட்டான் இன்னும் கோவிலில் மணி ஆட்டி கொண்டேதானே இருக்கின்றான்
அது, அது.. அவன் எங்களுக்கான சமூக நீதியினை மறுத்தான்
இதோ பார், மீனவர் கலாமும், பிராமணர் சுஜாதாவும் வகுப்பு தோழர்கள், ஆனால் கலாம் எங்கோ சென்றுவிட்டார், சுஜாதா அந்த இடத்தை அடையமுடியவில்லை ஏன்?
ஆமாம், எனக்கு குழப்பமாகத் தான் இருக்கின்றது
இதோ பார், இங்கு நீ மட்டுமல்ல எல்லோரும் ஒரு காலத்தில் ஒடுக்கபட்டவர்களே, தாழ்த்தபட்டவகளே
எப்படி?
நம்மை ஆண்டது ஆப்கானியன், என் முன்னோர் உழைப்பும் உன் முன்னோர் உழைப்பும் வரியாக அவனுக்குத்தான் சென்றன, அந்த உழைப்புத்தான் தாஜ்மகாலாலாகவும் அழகிய அரண்மனைகளாகவும் இன்னும் பலவுமாக எழுந்தது
ம்ம்
இங்கு எல்லோரும் சுரண்டபட்டோம் , எல்லோரும் தாழ்த்தபட்டோம், எல்லோர் உழைப்பும் ஆப்கானியரால் அடுத்து வெள்ளையனால் சுரண்டபட்டன
இருக்கலாம்
அவன் உப்புவரை வரிவிதித்தானே சாதிக்கொரு வரி விதித்தானா?
இல்லை, எல்லா சாதிக்கும் ஒரே வரிதான் விதித்தான்
அதெல்லாம் என்னாயிற்று
லண்டனுக்கு கப்பல் கப்பலாக தங்கமாக சென்றது
சொல், அவன் இங்கே நிர்வகித்தான் எல்லோரையும் அவன் உறிந்ததால்தானே உனக்குரிய உரிமையும் பணமும் கிடைக்காமல் போயிற்று
ஆமாம்
சுதந்திர இந்தியாவில் உனக்கு இன்று கிடைக்கும் சலுகை அன்று ஏன் இல்லை அரசாண்டவனும் வரிபிரித்தவனும் பிராமணனான வெள்ளையனா?
வெள்ளையன்
புரிந்து கொள், இங்கு எல்லோர் உழைப்பும் அவனால் சுரண்டபட்டது, எல்லோரும் அவன்முன் தாழ்த்தபட்டிருந்தோம், அவன் எல்லோரையும் ஒடுக்கித்தான் வைத்திருந்தான், உன் சமூகத்தினை ஒருவழியில் சுரண்டினான் என்றால் எல்லா சமூகத்தையும் இன்னும் பலவழிகளில் சுரண்டினான்
ம்ம்
அவனை விரட்டியபின்புதான் நாம் எழுந்து கொண்டிருகின்றோம், அவன் கொடுக்காத உரிமையினை இந்த சுதந்திர இந்தியாதான் உனக்கு கொடுத்தது, ஒரு விஷயம் சொல்
என்ன?
உங்களை போன்றவர்களை ஒடுக்கபட்டவர்கள் என ஆங்கில கைகூலியினர் தூண்டிவிட்டார்களே, ஆனால் உங்களை வெள்ளையன் ஆட்சியில் படிக்க வைத்தார்களா உயர்பதவி தந்தார்களா
இல்லை
ஏன்?
தெரியவில்லை
சுதந்திர இந்தியாதான் உன்னை உயர்த்தி கொண்டிருக்கின்றது, வெள்ளையன் மறுத்த வாய்ப்பையெல்லாம் இத்தேசமே தருகின்றது, ஆப்கானியமும் வெள்ளையமும் உன்னை மட்டும் சுரண்டவில்லை எல்லோரையும் சுரண்டிற்று, இப்பொழுது எல்லோரும் சேர்ந்துதான் எழுகின்றோம், அதை புரிந்துகொள் உருப்படுவாய் தேசமும் வளமாகும் பலமாகும்...!
No comments:
Post a Comment