Friday, October 8, 2021

கடவுளிடம் சரணடைய எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

 #கடவுள் பக்தி நிறைந்த ஒரு கணவனும் மனைவியும் "#இன்பசுற்றுலா" செல்கின்றனர்.

அங்கு ஏரியைப் பார்த்த மனைவி தன் கணவனிடம் நம் இருவர் மட்டும் தனியாக படகு சவாரி போகலாமா! என கேட்கிறாள்.
கணவனும் தன் மனைவியின் ஆசைக்காக சரி என்று சொல்ல... படகில் இருவரும் சிறிது தூரம் படகில் சென்றனர்
அப்போது #வானிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது பிறகு மெல்ல மெல்லக் காற்று வீச வேகமெடுத்து பலமாக காற்று வீச கரு மேகம் சூழ நெஞ்சு பதறும் அளவிற்கு இடி இடிக்க... மின்னல் வர இதில் மிகவும் பயந்துபோனவள் ஓடிவந்து தன் கணவன் அருகில் அமர்ந்துகொண்டு
"ஏனுங்க எனக்கு பயமாக இருக்கிறது துடுப்பை வேகமாகச் செலுத்துங்கள் சீக்கிரம் கரைக்கு போய் விடலாம் என்கிறாள் ."
தன் மனைவியை பார்த்து மென்மையாக சிரித்த கணவன் "உனக்கு பயமாக இருக்கிறதா! ஒரு நிமிடம்..."
என கூறி தன் பையில் ஆப்பிள் வெட்ட வைத்திருந்த ஒரு கூர்மையான கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தை நோக்கி சடார் என நீட்டினான்
அவளோ பயமில்லாது தன் கணவனை பார்த்து சிரிக்கிறாள், இந்த நேரத்தில் என்ன விளையாட்டு இது என்று அந்த மழை நேரத்திலும் மென்மையாக சிரிக்கிறாள்
"ஏன் சிரிக்கிறாய்! இது எவ்வளவு கூர்மையான கத்தி தெரியுமா! உனக்கு இதை கண்டு பயமாக இல்லையா!" என்று கணவன் கேட்க...
"கத்தி கூர்மையானதுதான் ஆனால் அதை தன் வசம் வைத்திருப்பது என் அன்புக்குரியவராச்சே!
நான் நேசிக்கும் ஒருவர் எனக்கு எப்படி தீங்கு செய்வார்!" என மிக நலினமாக சொல்கிறாள்.
கத்தியை தன கை பையின் உள்ளேயே போட்ட கணவன் தன் மனைவியின் கண்ணம் தொட்டு... சொன்னான்
"அதுபோலதான் அன்பே! இந்த காற்றும் புயல் வருவதுபோல் இருக்கும் இந்த அறிகுறிகளும் மிக ஆபத்தானது போல தான் தோன்றும்
ஆனால் இவற்றை எல்லாம் தன் வசம் வைத்திருக்கும் அந்த "ஆண்டவன்" என் அன்புக்குரியவனாயிற்றே!
நான் நேசிக்கும் அவன் என்னையும் உன்னையும் எப்படி அவன் துன்புறுத்துவான்!" என்றான்.
பக்தி மனதில் இருந்தால் மட்டும் போதாது சோதனைகளின் போதும் அது உறுதியாக இருக்க வேண்டும்
நம் பக்தியை சோதிக்க இதுவும் சோதனைகள் தான் ... யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத யாரையும் எந்த கஷ்டமும் ஒன்றும் செய்யாது என்றான்...
சிறிது நேரத்தில் கரு மேகங்கள் களைந்து, சூரியன் முகம் காட்டி, காற்று சாந்தமானது, பழைய படி சூழ்நிலை மாறியது
இறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம்
அந்த நம்பிக்கையோடு நல்லவர்களாக நடை பயிலுங்கள் .... நம்மைப் படைத்தவன் நம்மை வழி நடத்துவான்
கடவுளிடம் சரணடைய எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏
அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏
ஆலவாய் அரசனே அரசியே போற்றி போற்றி 🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...