தை அமாவாசை ;அபிராமிப் பட்டருக்கு அன்னை அருளிய நாள்; அமாவாசையில் பௌர்ணமி வந்த நாள்!.
''அபிராமிப்பட்டார் காட்டும் பதினாறு பேறுகள்.''
'' பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க '' என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன?
பதினாறு பேறுகள் :
புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி
நன்மக்கள்
பொன்
நெல்
அறிவு
பெருமை
ஆயுள்
நல்லூழ்
இளமை
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
பொருள்.
ஆனால் அபிராமிப்பட்டார் அன்னை அபிராமியிடம் வேண்டும் பதினாறு பேறுகள் எவை தெரியுமா?
அபிராமி அந்தாதி:
கலையாத கல்வியும்
குறையாத வயதும்
ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும்
அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
_அபிராமி பட்டர்.
No comments:
Post a Comment