உலகப் புகழ்பெற்ற டிசைனர் VIrgil Abloh - 41 (Louis Vuitton) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.
மரணத்தைவிட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார்கள் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த காலணிகள், விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_கவுனில் இருக்கிறேன்.
என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லை.
என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கும் மற்றொரு லேபிற்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.
நான் தினசரி லட்சக்கணக்கானவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரைதான் எனது ஆட்டோகிராப்.
அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை.
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்களின் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு.
தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கு கூட இரண்டுநபர்கள் தேவைப்படுகிறது.
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ஆனால்
சில அன்பானவர்களின் முகங்களும்,
அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
எதுவுமே நிரந்தரமில்லை.
No comments:
Post a Comment