‛கற்க கசடற' என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க மத்திய அரசின் கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக திருக்குறளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.
பார்லி., கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:
* ‛பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்' திட்டம் பெண்கள் முன்னேற்ற வழிவகை செய்துள்ளது.
* ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
* நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை உருவாக்கியுள்ளது.
* ‛கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க அரசின் கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
* நான்கரை கோடி மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கியுள்ளது.
* உதவித்தொகை வழங்குவதால் இஸ்லாமிய மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது.
* இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களை சந்தித்து வந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
* ‛ஸ்டார்ட்அப்' திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* ஜி.எஸ்.டி வருமானம் கடந்த சில மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
* நாட்டின் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.
No comments:
Post a Comment