திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான். அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது...
.
திருடனுக்கு, திருடச் செல்லலாமா... வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது.. இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்..
.
யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது..
.
அப்போது திருடன் நாயிடம், \'\'ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய்\'\' என்று கேட்டான்..
.
அதற்கு அந்த நாய் சொல்லியது, \'\'நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன்..
.
எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று......!!!
...........யோசிக்க வேண்டிய விஷயம் தானே......!!!
வாழ்க்கையில் இலவசமே வேண்டாம் .
No comments:
Post a Comment