ரஜினிக்கு கடந்த 8 ஆண்டுகளாக தொடர் சோதனைகள்...
அவரது உடல் நல கோளாறுகள், லதா ரஜினியின் பள்ளி விவகாரங்கள், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, சிறிய மகளின் விவாகரத்து, அரசியல் துறவறம்...,
இப்போது பெரிய மகள் மற்றும் நடிகர் தனுஷுக்கு இடையேயான விவாகரத்து (அதுவும் அவர்கள் மகன் யாத்ராவிற்கே 15 வயது)
ரஜினி லதாவை திருமணம் செய்த பின் எந்த கிசுகிசு கூட இல்லை அவரைப் பற்றி ! ஆனால் அவரின் இரண்டு மகள் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது வருத்தமே
அதுவும் தனுஷ் - ஐஸ்வர்யா 18 வருடத்திற்கு பின் விவாகரத்து என்பது நிச்சயம் அவர் நிம்மதியைக் கெடுக்கும் விஷயமே !
ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின் தான் தனுஷிற்கு பேரும் புகழும் கிடைத்தது என்றே சொல்லலாம்
அவர் வணங்கும் இறைவன் இவற்றை தாங்கும் மனவலிமையை அளிப்பார். இறைவனோடு சேர்ந்து அவரது ரசிகர்களும் தமிழக மக்களும் அவரை என்றென்றும் தளரவிடாமல் தாங்கிபிடிப்பார்கள்....
என்று நம்புகிறேன்...
No comments:
Post a Comment