அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று (ஜன.,31) மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: மாணவி லாவண்யா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிக்கு துணை நிற்கும் மதுரை ஐகோர்ட் கிளைக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment