அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு
மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் செயல்படும் மேரா ரேஷன் ஆப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களை பற்றியும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேரா ரேஷன் ஆப்:
ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த முக்கிய நோக்கம் புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்க உதவ வேண்டும் என்பதாகும். ரேஷன் சேவைகளை எளிமையான முறையில் பெறுவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்தச் சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, ரேஷன் பொருட்களின் நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேரா ரேஷன் செயலி மூலம் பயனர்கள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளைப் பெற முடியும். மேரா ரேஷன் ஆப்பை பதிவிறக்கம் செய்வதற்கு Google Play Store க்குச் சென்று அங்கு மத்திய Aepds குழு பதிவேற்றிய செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆரம்பத்தில், இந்த செயலியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது 10 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அம்சங்கள்:
ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பித்து பயனர் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து நமக்கு அரசு வழங்கியுள்ள அளவுகளை அறிந்து கொள்ளலாம்.
பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை இணையத்தின் மூலம் தெரிவித்து அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர் சரிபார்க்கலாம்.
ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் தங்கள் பரிவர்த்தனை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை சரிபார்க்கலாம்.
பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் சேவைகளை பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment