கொங்கணரும் மிக சரியாக இந்த வில்வமரம் மற்றும் இலுப்பைமரங்கள் நிறைந்த இடத்தில் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆசியுடன் 1000 மாற்றுக்கள் உள்ள தங்கத்தை தயாரித்தார்.
மாத்தூர் என்னுமிடத்தில் அவர்கள் மாற்று தயாரித்து இங்குள்ள பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றுத் தங்கத்தைத் தயாரித்தார் எனவும், அப்போது அது ஜோதி வடிவமாகி மண்ணுக்குள் புதைந்து பின்னர் லிங்கத் திருமேனியாக ஆனதாவும் கூறுவர். ஜோதியிலிருந்து தோன்றியதால் மூலவர் சுயம்பிரகாசேசுவரர் என்றும் தான்தோன்றீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று.ஒரு புறம் இரும்பு மறு புறம் அதன் உச்சம் ஜோதியாகிய இறைநிலை.
காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில் உள்ளது.கிட்டதட்ட ஒரு 6 கி மீ தொலைவில் உள்ளது ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன பைரவர் கோவில்.கோவிலின் அம்பாள் சன்னதிக்கு எதிரே ஒரு மிகப்பெரிய குளம் உள்ளது.
பைரவர் இங்கே ஜொலிக்கிறார்.ஒரு கையில் தங்க அட்சயபாத்திரம் ஏந்திஉள்ளார்.இங்கே வேண்டிக்கொள்ள வீட்டில் ஸ்வர்ணம் பெருகும் என்கிறார்கள்.இரண்டு நாய்களுடன் காட்சிதருகிறார். பைரவர் சன்னதியில் எந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கொஞ்சம் தவத்தில் ஆழ்ந்து சொல்ல சுழலும் ஒரு அலையினை உணரலாம்.
பைரவருக்கு அருகே ஒரு சிறிய பலகையில் நாய் உருவம் உள்ளது, நாய்கடி பெற்றவர்கள் இங்கு வந்து இந்த தூணை வளம் வந்து , இங்குள்ள குளத்தில் நீராடி பைரவரை வேண்ட, பைரவர் விஷதன்மையை முறிப்பதாக சொல்கிறார்கள்.
சுயம்பிரகாசேஸ்வரர், சிவன் மிக சிறியவடிவில் உள்ளார்.தெய்வீகம் நிறைந்த அலைகள் சூழ்ந்துள்ளது.
கோயிலின் முன் மண்டபத்தூணில் ஒரு அங்குல அளவிலான விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கிரீடம் அணிந்த நிலையில் உள்ளார். இறைவி சன்னதியின் எதிரில் உள்ள தூணில் வராகி உள்ளார்.
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் விரைவில் நடைபெற, புத்திர தோஷங்கள் நீங்க இக்கோயிலில் உள்ள பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும்,விசேஷ பூஜைகள் செய்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
No comments:
Post a Comment