தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி, அவரது சொந்த மாவட்டமான சிதம்பரத்தில், மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயரில் கடல்சார் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி மற்றும் மகள்கள் உள்ளனர்.
மாணவர்களிடம் கடந்த ஆண்டு 42 கோடி ரூபாய் அளவிற்குக் கட்டணமாக வசூலித்த இந்த நிறுவனம், இதுவரை எந்தவிதப் பாடமும் நடத்தாமல் பயிற்சியும் கொடுக்காமல், வெறுமனே சர்டிபிகேட்டை மட்டும் கொடுத்துள்ளதாம்.
பல மாணவர்கள் இது தொடர்பாக மும்பையில் இருக்கும் கப்பல் போக்குவரத்துத் துறையின் டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பிய கடித்தில்,
கப்பல் தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி அளிக்க ஒரு மாணவனுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், மேலும் வேலை வாய்ப்பு பெற்ற தர 3 லட்சம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் கட்டணம் பெற்றதாகவும்,பணத்தை பெற்றுக் கொண்டு பயிற்சி அளிக்காமல் கல்லூரி நிர்வாகம் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்பட்டு, தொடர்ந்து கல்லூரி மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்களை அனுப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய கப்பல் துறை இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது. அதில், உண்மைத் தன்மை அறியப்பட்டதால், கே.எஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரிக்கான அங்கீகாரத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பாஜகவை இவர்கள் கடுமையாக எதிர்க்க காரணம் பொது மக்கள் நலன் அல்ல...
தன் மக்கள் நலனுக்காக...
இவர்கள் கொள்ளை அடிப்பதை மறைக்க காமராஜர் பெயரில் கல்லூரி...
இது காமராஜரை அவமானப்படுத்தும் செயல்...
No comments:
Post a Comment