தங்கள் மதத்தை சார்ந்தவர்களை காப்பாற்ற இவருக்குத்தான் என்ன ஒரு அவசரம்.
இந்துக்கள் சில விஷயத்தை இவர்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்.
1. லாவண்யா மரணத்தில் எதாவது ஒரு கிறித்தவ அமைப்பாவது இதுவரை அந்த பள்ளியை கண்டித்து அறிக்கை விட்டுள்ளதா?
2. ஆனால் இந்துக்கள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் தவறுகள் நடந்தால் மட்டும் ஏன் முந்திரிக்கொட்டையாக முந்திக்கொண்டு ஏன் இந்துக்களே எதிர்க்கிறோம்?. ஏன் நாம் இவர்களைப்போல் அமைதியாக இருப்பதில்லை?.
3. நாமும் இவர்களைப் போல் நம்முடைய ஆட்கள் தவறு செய்யும் போது மட்டும் ஏன் நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை என்று அமைதியாக இருப்பதில்லை?. நித்யானந்தா விஷயம் முதல் அனைத்திலும் நாம் ஏன் இவர்களை போல் அமைதியாக இருக்க கூடாது?. அற்புத சுகமளிக்கும் சில கேடுகெட்டவர்களை விட நித்யானந்தா மோசமானவர் அல்ல.
4. உலகில் மிக அபத்தான வார்த்தை "நடுநிலை ". அதாவது அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு பைத்தியக்கார நிலை. இவன் எப்போது எங்கு சாய்வான் என்று தெரியாது. இந்துக்களின் அழிவுக்கு காரணம் பிற மத்ததவர்கள் அல்ல. இந்து மதத்தில் இந்து மத அறிவே இல்லாமல் இருக்கும் நடுநிலை விஷமிகள்.
5. உனக்கு ஆயிரம் விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப மாறவில்லையென்றால் அழிந்து போவாய் என்பது விதி.
6. மற்ற மதத்தில் நடுநிலை பேசுபவர்கள் இல்லையா?. இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மத சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வரும்போது அமைதியாக இருந்துவிட்டு இந்து மத பிரச்சினைகள் வரும்போது மட்டுமே மனிதபிமானம் நடுநிலை எல்லாம் பேசுவார்கள்.
"அவன் கிறித்தவனாகவும், இவன் முஸ்லீமாகவும் இருக்கும் வரை நீ ஒரு இந்துவாகவே இருந்துவிட்டு போ ".
உனக்கு மட்டும் என்ன அவசரம்?.
No comments:
Post a Comment