கேள்வி: தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? எப்படி சாத்தியமாகும்?
பதில் :
திமுக உதயமாகும் பொழுது, ஈ.வெ.ரா ஒன்று சொன்னாராம்.
''எந்த நம்பிக்கையில் இவன்ங்க கட்சியை ஆரம்பிக்கிறாங்கன்னு எனக்கு தெரியல. காங்கிரஸின் வாலின் நுணியை கூட வெட்ட முடியாது. நட்டம் தான் வரும்.
காங்கிரஸ் காரன் என்ன செய்யலையோ அத செய்யனும். அவன் செஞ்ச நல்லத நல்லதுன்னு சொன்னா ஒரு பயல் வரமாட்டான். பொய்யும் சொல்ல முடியாது. என் கதை வேறு. உங்க கதை வேறு... இடையில கம்யூனிஸ்ட் வேற... என்னமோ போங்க." இது தான் ஈ.வெ.ரா கொடுத்த அணிந்துரை.
நன்மையை தீமை என்று பொய் சொல்லி திமுக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. அந்த புண்ணியத்தை ஈவு இரக்கமில்லாமல் செய்தது படித்தவர், மாமேதை, இலக்கிய மேதை, அறிஞர் என்றெல்லாம் தி. கூட்டங்களால் இன்று வர்ணிக்கப்படும் அண்ணாதுரை.
தமிழகத்திற்கு கெட்ட நேரத்தை ஆரம்பித்த பெருமைக்குரியவர்.
ஆரம்பித்தது எப்பொழுது என்றால்,1949 செப்.28-ல், ராபின்ஸன் பில்டிங்-ல்.
மக்களை மடையர்களாக்க ஒரு அமைப்பை ஏற்படுத்திய தினம் அது.
மூலதனம்: பொய் புரட்டு வதந்தி இவைகள்தான்.
மேற்படி மூலதனத்தை கோட்பாடுகளாக வைத்துக் கொண்டு, 17 வருடம் போராடி (?) 67-ல் ஆட்சிக்கு வரவில்லையா?
மகந்தா - என்ற மாணவன் அஸ்ஸாமில் காங்.யை புரட்டி போட்டு முதல்வராகவில்லையா?
காணாமல் போய் விடுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். எம் ஜி ஆரை. திமுகவை புதைகுழிக்குள் தள்ளவில்லையா? (எம் ஜி ஆர் சாகும் வரை திமுக வெளியில் வரவே முடியவில்லை)
என் டி ஆர்-க்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. இரு முறை முதலமைச்சராகவில்லையா?
உலகம் அழியும் வரை கம்யூனிஸ்ட் தான் என்ற நிலையிலிருந்த பெருங்கோட்டை மே.வங்காளத்தில் இன்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படவில்லையா?
மத்தியில், 80-ல் உதயமான பா.ஜ.க 18 வருடம் காத்திருந்து 98-ல் ஆட்சியை பிடிக்கவில்லையா?
ஹஸாரே - புண்ணியத்தில், அதிகாரியாக இருந்த கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சி பீடத்தில் அமரவில்லையா?
அது போல்தான் தமிழகத்தில் தாமரை மலர்வதும்.
ஏறக்குறைய 2000க்கு பிறகு தான் பாஜக-வின் சுடர் ஒளி வீச ஆரம்பித்தது.
பெரிய சவால், "பெரும்பாலான தமிழக மக்களின் ரசனையை தரமாக்குவது தான்." அதைத்தான் இன்று தமிழக பாஜக செய்து கொண்டிருக்கிறது. இந்துத்வா கொள்கையை தயங்கிக் கொண்டு பரப்பும் சூழ்நிலை இங்கு நிலவுகிறது. காரணம், திராவிட கட்சிகளின் பொய் புரட்டு பேதமை தீது இருள் என்ற குகையில் இருக்கிறார்கள் மக்கள். அவர்களை வெளிக்கொணர்வதற்கு காலம் பிடிக்க தான் செய்யும்.
ஒரு நாள் நிச்சயம் மலரும்.
No comments:
Post a Comment