Sunday, January 30, 2022

இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்!

🎙🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
விளம்பரம், நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது தெரியுமா?
அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத "ஷாம்பு" தலைக்கு "ப்ரோ விட்டமின் B" தரும் என்று நம்ப வைக்கிறது. சீயக்காய் ஷாம்புவாக வந்தால்தான் தலையில் வேலை செய்யும் என நம்ப வைத்ததும் விளம்பரம் தான்.
கரி மற்றும் உப்பில் பல் தேய்த்தது தவறு என்று நம்ப வைத்ததும் விளம்பரம் தான். இன்று உங்க பேஸ்டில் உப்பு இருக்கா? என்று கேட்பதும் அதே விளம்பரம் தான்!
வாங்கும் போதே 30% வரை நட்டத்துடன் நாம் வாங்கும் ஒரே பண்டம் தங்கம் தான். அதையே சிரித்தபடி ஆனந்தமாக வாங்க வைப்பதும் "வளையல் திருவிழா" விளம்பரம் தான்.
சரி.. அந்த தங்கத்தை அதே 30% வரை நட்டத்துடன் விற்கும் போதும் சிரித்தபடி நம்மை விற்று "கனவுகளை நினைவாக்க" சொல்வதும் விளம்பரம் தான்.
3 லட்சம் சதுர அடியில் அரண்மனை உங்களுக்காக கட்டப்படுவதாக சினேகா சத்தியம் செய்வது எப்பேர்பட்ட மகிழ்ச்சி.. ! அத்தனை பெரிய கட்டிடத்தில் நீங்கள் காரில் வந்தாலும் உங்களுக்கு "பார்க்கிங்" கூட கிடையாது என்பது உங்களுக்கு புரிவதில்லை. அதுவும், விளம்பரம் தான்.
1000 ரூபாய் புடவையை 3000 ரூபாய்க்கு வாங்கி வெளியே வரும் போது ஒரு தொன்னை சக்கரைபொங்கல் தருகிறான் பாருங்கள். அவன் நல்லவன். 30 வினாடி விளம்பரத்தில் நடிக்க கோடி கோடியாய் தரும் அவர் அதை யார் தலையில் கட்டுவார் என்று கேட்க நம்மை மறக்க வைப்பதும் விளம்பரம்தான்.
விற்கப்படும் வீடுகளுக்கு மனைகளுக்கு குடிநீர், கழிவுநீர் வசதிகள் இருக்கிறதா என்று யோசிக்க விடாமல் "சிங்களா டிசைட் டபுளா ஒகே" பண்ண சொல்றாங்க பாருங்க ...அங்க நிக்குது விளம்பரம்.
பூஸ்ட், ஹார்லிக்ஸ் இதுவரை உலகில் யாரையாவது வளர்த்து இருக்கிறது என்று கேட்டிருக்கீர்களா?
நேற்றுவரை எண்ணை கெடுதல் என்றவன் இன்று பூரி சாப்பிட்டால் "கார்பொரேட் மீட்டிங்" கில் பிரமாதமான தீர்வு சொல்வான் என்பதை சொல்வதும் விளம்பரம் தான்.
ஒரு எண்ணையில் வடை சுட்டால் உங்களுக்கு ரத்த கொதிப்பு, சக்கரை நோய், சத்து குறைவு நரம்பு தளர்ச்சி நியாபக மறதி இப்படி எல்லா பிரச்சனையும் போகும் என்பது தெரியுமா?
கொஞ்சம் கூட சுயசிந்தனை அற்றவர்களா நம்மை இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்க அடிப்பது உங்களுக்கு தெரியவில்லை. அந்த மட்டில் அவர்களுக்கு வெற்றியே. இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்!
இத்தனை சொல்றேனே...இதை நீங்கள் share பண்ணி நாலு பேர் அறிய செய்வீர்களா என்ன? மாட்டீர்கள்!
காரணம் இது விளம்பரம் இல்லை.
நிதர்சனம்.��
📡📡📡📡📡📡📡📡📡📡

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...