Monday, January 31, 2022

அமைச்சருடன் மீண்டும் மோதல்; கரூரில் கதறிய எம்.பி., ஜோதிமணி.

 உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான பேச்சில், அமைச்சர் செந்தில்பாலாஜி, காங்., - எம்.பி., ஜோதிமணி இடையே மோதல் வெடித்தது.



latest tamil news


கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று காலை 11:30 மணிக்கு, கூட்டணி கட்சியினருடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சு நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற இந்த கூட்டத்தில், காங்., - எம்.பி., ஜோதிமணி உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது நடந்த பேச்சில், 'மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி வார்டுகளில் காங்.,குக்கு குறைந்த இடங்களே ஒதுக்கீடு செய்யப்படும்' என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர். கோபமடைந்த ஜோதிமணி, 'சிறிய கட்சிகளுக்கெல்லாம் வார்டு ஒதுக்கீடு செய்யும் போது, தேசிய கட்சிக்கு குறைந்த இடங்கள் தரலாமா?' என, பேசினார். இதனால், அவருக்கும், மற்ற கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


latest tamil news



அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தலையிட்டு, 'நீங்கள் வெளியில் போகலாம்' என, ஜோதிமணியை பார்த்து கூறியதாக தெரிகிறது. இதில், மேலும் ஆத்திரமடைந்த ஜோதிமணி, கூட்டத்தை விட்டு வெளியேறி, மரியாதை இல்லாமல் நடத்தியதாக, தி.மு.க., அலுவலகத்திற்கு வெளியே நின்று கதறினார்.

காங்., மாவட்ட தலைவர் சின்னசாமி கூறியதாவது: அமைச்சரும், ஜோதிமணியும் பேசிக் கொண்டிருந்த போது, சில நிர்வாகிகள், 'உங்கள் கட்சியில் ஆட்களே இல்லை' என, பேசினர். அதன் பின் தான் பிரச்னை ஏற்பட்டது. அப்போது அமைச்சர் 'கூட்டணி கட்சிகளை பற்றி பேச வேண்டுமானால் வெளியில் போய் பேசுங்க' என, கூறியதால் ஜோதிமணி வெளியேறினார். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:எம்.பி., ஜோதிமணி புகார் குறித்து, தற்சமயம் எதுவும் பேச விரும்பவில்லை. காங்., கட்சியை தவிர, கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமுகமாக பேசி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...