போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்: மக்கள் கோரிக்கை வைத்தால், அரசு சார்பில் சாலையோர ஹோட்டல்கள் திறக்க பரிசீலிக்கப்படும். எந்த ேஹாட்டலாக
இருந்தாலும், தரமான உணவு தர வேண்டும். புகார்கள் வரும் பட்சத்தில் நடவடிக்கை
எடுக்கப்படும்.
தரமான உணவுக்கும், சாலையோர ஹோட்டலுக்கும் இடையே, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்கு... சில ஹோட்டல்கள்ல தான் பஸ்களை நிறுத்தணும்னு, உங்க போக்குவரத்து கழக அதிகாரிகளே, டிரைவர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிற சங்கதி எல்லாம் உங்களுக்கு தெரியாதாங்கிறது தான் என்னோட 'டவுட்!'
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.டவுட் தனபாலு: கடந்த 2019ல் பிரதமர் மோடி அடிக்கல்நாட்டின மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு, 2021 ஏப்ரல் வரை ஆட்சியில இருந்த நீங்க, ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க எந்தநடவடிக்கையும் எடுக்காதது ஏன்கிறது, என்னோட 'டவுட்!'
பத்திரிகை செய்தி: இந்தியன் - அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் சார்பில், 'வீடியோ
கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி அன்சாரி மற்றும் நான்கு அமெரிக்க எம்.பி.,க்கள், 'இந்தியாவின் பன்முக தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது; மனித உரிமைகள் மீறப்படுகின்றன' எனக் குற்றஞ்சாட்டினர்.
டவுட் தனபாலு: பல வருஷங்களுக்கு முன்னாடி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாகிஸ்தான் போயிருந்தாரு... அப்ப, கோத்ரா
கலவரம் பற்றி அந்த நாட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டப்ப, 'அது எங்க உள்நாட்டு
விவகாரம். அதைப் பற்றி இங்கே பேச மாட்டேன்'ன்னு பொட்டுல அடிச்சாப்புல பதில் தந்தாரு... தேசியவாதம் பேசுற காங்கிரசை சேர்ந்த ஹமீது அன்சாரி, இதை எல்லாம் மறந்துட்டாராங்கிறது தான்.
No comments:
Post a Comment