Thursday, May 5, 2022

தி.மு.க.,வில் 50 சதவீத மா.செ.,க்கள் மாற்றம்.

 தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அதிவேக அரசியலை எதிர்கொள்ளவும், வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கவும், தி.மு.க.,வில் தற்போதுள்ள மாவட்ட செயலர்களில், 50சதவீதம் பேர் மாற்றப்பட உள்ளனர்.


தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பேரூர் கிளை வார்டு, நகர வார்டு செயலர் தேர்தல் முடிந்துள்ளது. நகர, பகுதி செயலர் தேர்தல் தற்போது நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் ஒன்றிய செயலர் தேர்தலும், 20ம் தேதி முதல் 30 வரை, மாவட்ட செயலர் தேர்தலும் நடைபெற உள்ளது.


latest tamil news



வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க கட்சியினரை தயார்படுத்தவும், அண்ணாமலையின் அதிவேக அரசியலை எதிர்கொள்ளவும் வசதியாக, 50 முதல் 60 வயதுள்ளவர்களையே, மாவட்ட செயலர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று, கட்சி மேலிடத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கட்சியில் உதயநிதியின் கை ஓங்கும் வகையில், மாவட்ட செயலர்கள் நியமனம் இருக்க வேண்டும் என்பதற்காக, 'ஆப்பரேஷன் - எஸ் பிளான்' தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., வில் நால்வர் அணியாக கருதப்படுகிற நேரு, ஆ.ராஜா, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்று, உட்கட்சி தேர்தலை கண்காணித்து வருகின்றனர்.கட்சியின் நிர்வாக வசதிக்காக, இரண்டு, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர் என்ற அடிப்படையில், 77 மாவட்ட செயலர்கள் உள்ளனர்.'ஆப்பரேஷன் - எஸ்' திட்டத்தின்படி, மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. திருவள்ளூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள், ஒருங்கிணைந்த மாவட்டங்களாக மாறும் நிலை உருவாகி உள்ளது. அங்கெல்லாம் மாவட்ட செயலர்களாகஇருந்தவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.



ஒருங்கிணைந்த மாவட்ட செயலர் பதவியை கைப்பற்ற, நேரு, ஆ.ராஜா வீடுகளுக்கு, கட்சியினர் படையெடுத்து வருகின்றனர். ஆனால், ஜாதி செல்வாக்கு, திறமையான நிர்வாகி, 25 ஆண்டு காலம் கட்சி பணி என்ற அடிப்படையில், மாவட்ட செயலர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
படித்த இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைந்து பதவிகளை பெறுவதை தடுக்கும் வகையில், புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதனால், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் நீண்ட காலமாக குறுநில மன்னர்களாக கோலோச்சி வரும் மாவட்ட செயலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...