Thursday, May 5, 2022

'எத்தனை நாளைக்கு இரட்டை வேடம்'

 நாம் சிறப்பான ஆங்கில அறிவை பெற்றிருந்தால், உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம்; வாழ்வாதாரத்தையும் வளமாக அமைத்துக் கொள்ளலாம்.ஆங்கில மொழியை சிறப்பாக கற்றுத் தேர்ந்ததால் தான், திருவாரூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட, கமலா ஹாரிசின் பெற்றோர், அமெரிக்காவில் உயரிய வாழ்க்கை வாழ முடிந்தது; கமலா ஹாரிசும், அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக முடிந்தது. நிலைமை இப்படி இருக் கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது போல, ஆங்கிலத்திற்கு மாற்றாக, ஹிந்தியை நாம் கற்றால் அடையப் போகும் பலன் என்ன? குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஹிந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த சகோதரர்களுடன், நாம் போட்டி போட வேண்டியது தான் நேரிடும். ஹிந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர், வாழ்வாதாரம் தேடி, தென் மாநிலங்களை நோக்கி படையெடுக்கும் நிலையில், ஹிந்தி கற்பதால் பெரிய பலன் கிடைக்கும் என்று சொல்வது அறிவுப்பூர்வமானதா? எனவே, இன்றைய மத்திய ஆட்சியாளர்களும் சரி, நாளைய ஆட்சியாளர்களும் சரி... இந்தியா ஒன்றுபட்ட நாடாக தொடர வேண்டுமானால், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ௨௨ மொழிகளும், அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழியாகவும், மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலமும் நீடிக்க அனுமதிக்க வேண்டும்.அதற்கேற்ற வகையில், சட்டம் இயற்றி அமல்படுத்த வேண்டும். இல்லையேல் ஜாதி, மத, எல்லை சண்டைகளின் வரிசையில், மொழிச் சண்டையும் உருவாகத்தான் வழிவகுக்குமே தவிர, நாட்டின் ஒற்றுமை நீடித்து நிலைத்திருக்க உதவாது. இதை, ஹிந்திக்கு ஆதரவாக பேசுவோர், எழுதுவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...