Sunday, May 15, 2022

பொங்கி எழுந்து ஏதும் செய்ய வேண்டாம்......

 ரொட்டி துண்டுக்கு மாறினார்கள், டீ பன்னுக்கு மாறினார்கள் என மதமாற்றம் சமீபகாலமாக நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது..

நீங்கள் ஏன் மதம் மாறினீர்கள் என என் தந்தையிடம் நான் கேட்டதற்கு அவர் அளித்த பதிலுரைகள்..
உண்மையில் நாங்கள் ஏன் மதம் மாறினோம் தெரியுமா???
எல்லோரையும் போல காலில் முள் குத்தாமல் செருப்பு போட்டு நடக்க மதம் மாறினோம்..
கக்கத்தில் மட்டுமே வைச்சிருந்த துண்டை கழுத்துல போட மதம் மாறினோம்..
சைக்கிள் வாங்க காசு இருந்தும் புது சைக்கிள் வாங்கி தெருவில் ஓட்ட முடியாததால் மதம் மாறினோம்..
ஒரு இத்துப்போன டீ கடையில் எல்லோரையும் போல எச்சி கிளாசில் டீ குடிக்க முடியாததால் மதம் மாறினோம்..
காரை வீடு கட்ட காசு இருந்தும் வெளில ஒரு திண்ண கட்டி கால் மேல கால் போட்டு ஒட்கார முடியததால் மதம் மாறினோம்..
8முழம் வேஷ்டி இருந்தும் முட்டிக்கு மேல மடிச்சு கட்ட முடியாததால் மதம் மாறினோம்..
5வயசு சின்ன பையனயும் கைகட்டி ஐயானு கூப்பிட வேண்டியிருக்கேனு மதம் மாறினோம்..
செத்துப்போன ஒத்தை ஆம்பள புள்ளையையும் பாடை கட்டி தெருவுல தூக்கிட்டு போக முடியாம மதம் மாறினோம்..
இம்புட்டு பெரிய ஒலகம் இருந்தும் என் வீட்டு பொணத்த பொதைக்க 6அடி நிலம் இல்லாததால் மதம் மாறினோம்...
நாய் கூட உள்ள போக நான் மட்டும் எட்ட நின்னு என் சாமிய வேடிக்கை பார்க்க மனசில்லாம மதம் மாறினோம்...
பள்ளிக்கூடத்துல ஒரு ஓரத்துல ஒதுங்கி நின்னுத்தான் பாடம் படிக்க முடியாம மதம் மாறினோம்..
நீங்க வர்ற பாதையில நாங்க வரக்கூடாதுனா? போறதுக்கு வேறு பாதை இல்லாம மதம் மாறினோம்..
திருவிழாவுல ஊர் கூடி தேர் இழுக்க முடியாம மதம் மாறினோம்..
கடவுளின் பெயரால் திணிச்ச சாதிய கடவுளின் கருவரையை பார்த்து சாதி உண்மைதானானு கேட்க முடியாததால் மதம் மாறினோம்..
பஸ்ல நான் உட்கார்ந்த சீட்டுல என் பக்கத்துல யாரும் உட்காரல அதுனால மதம் மாறினோம்..
இந்த மனித வாழ்வு எப்படியிருக்கும்.. அதை வாழ்ந்து பார்க்கவே மதம் மாறினோம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...